ஓணம் லாட்டரி: முதல் பரிசை விடுங்க.. ரூ.20,000க்கு டிக்கெட் வாங்கியவருக்கு நடந்த மறக்க முடியா சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தனி மவுசு உள்ளது. பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பல கோடி ரூபாய் முதல் பரிசுத்தொகையாகும். இதனால் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிக்காதா? என்ற ஆசையில் பலரும் லாட்டரிகளை வாங்கி குவித்து வருவதை காண முடியும். யாரோ ஒருவருக்கு அடிக்கும் அதிர்ஷ்டத்திற்கு பலரும் தங்கள் கையில் கிடைக்கும் காசை செலவழிப்பார்கள்.

ஒரு சிலரோ அதீத ஆசையால், பல லாட்டரிகளை வாங்கி குவித்து கடைசியில் பரிசுத்தொகை எதுவும் அடிக்காமல் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள்.. இது ஆண்டுதோறும் கேரளாவில் நடக்க கூடிய நிகழ்வுதான். ஏழை எளிய மக்கள் லாட்டரியை வாங்கி பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பதால்தால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது.

kerala lottery onam bumper lottery

அதெல்லாம் இருக்கட்டும் இங்கேஎ விஷயத்திற்கு வருவோம்.. கேரளவில் ஓணம் லாட்டரிக்கு ரூ.25 கோடி முதல் பரிசாக உள்ளது. இதனால், கோடிகள் நமக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பலரும் ஒன்றிற்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி குவித்த செய்திகள் வெளி வந்தன. இதேபோலத்தான் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு 40 டிக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார் ரமேஷ் என்பவர்.

தனியாக வசித்து வரும் ரமேஷ் வீட்டில் பத்திரமாக வைத்து இருந்த டிக்கெட்டுகளை திருடர்கள் புகுந்து குலுக்கலுக்கு முன்பாக திருடிவிட்டு சென்றுவிட்டார்களாம்.. 40 டிக்கெட்டுகளை வாங்கிய அவருக்கு கடைசியில் பரிசு விழுந்து இருக்கிறதா இல்லையா என கூட பார்க்க முடியாததோடு மொத்த டிக்கெட்டுகளும் திருடர்கள் கொண்டு போய்விட்டதால் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறாராம் ரமேஷ்...

ஆனால் இதில் ஹைலட் என்னவென்றால், 40 டிக்கெட்டுகளை திருடர்கள் திருடிவிட்டு சென்றதால், மீண்டும் 10 டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். ஆனால் அதற்கும் ஒரு பரிசு கூட கிடைக்கவில்லை. ரமேசுக்கு 55 லட்சம் ரூபாய் கடன் இருப்பதால் அதை எப்படியவது அடைத்து விட வேண்டும் என எண்ணி, தனது ஒரு மாத சம்பளத்தை அப்படியே லாட்டரிக்காக செலவழித்து இருக்கிறார்.

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை உள்ளது. மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்கிறது. கேரள அரசுக்கு கணிசமான தொகை வருவாய் லாட்டரி மூலம் கிடைக்கிறது. கேரளாவை பொறுத்தவரை டீக்கடை இருப்பது போல திரும்பிய பக்கம் எல்லாம் லாட்டரி கடைகளை காண முடியும். தினமும் அங்கு லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. புதன்கிழமை மட்டும் ரூ.1 கோடி பரிசுத்தொகைக்கான ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை உள்ளது. மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்கிறது. கேரள அரசுக்கு கணிசமான தொகை வருவாய் லாட்டரி மூலம் கிடைக்கிறது. கேரளாவை பொறுத்தவரை டீக்கடை இருப்பது போல திரும்பிய பக்கம் எல்லாம் லாட்டரி கடைகளை காண முடியும். தினமும் அங்கு லாட்டரி குலுக்கம் நடைபெறுகிறது. புதன்கிழமை மட்டும் ரூ.1 கோடி பரிசுத்தொகைக்கான ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.

இதர நாட்களில் முதல் பரிசாக ரூ.75 லட்சம் கொண்ட லாட்டரி குலுக்கள் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ.40 ஆகும். தினசரி லாட்டரி டிக்கெட்டுகள் தவிர வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு லாட்டரி, விஷூ பம்பர், சம்மர் பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விறபனை செய்யப்படுகிறது.

இதில் ஒணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசுத்தொகை ரூ.25 கோடியாகும். இதனால், இந்த லாட்டரி டிக்கெட்டுகளுக்கு சேட்டன்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கேரளாவிற்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் கூட இந்த டிக்கெட்டுகளை விரும்பி வாங்கி செல்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெடுகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனை தொடங்கியது. சுமார் 90 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சடிக்க கேரள லாட்டரி துறை திட்டமிட்டது. இதில், தற்போதுவரை சுமார் 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது. இதில் 69 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாலக்காட்டில்தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனையகியுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் 12,78,720 -டிக்கெட்டுகளும் திருவனந்தபுரத்தில் 9,21,350 டிக்கெட்டுகளும் விற்றுள்ளன. ஓணம் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். கடந்த இரு மாதங்களாக பரபரப்பான விற்பனயாகி வந்த இந்த லாட்டரி டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+