உணவில் உப்பு அதிகம் இருந்ததால் ஏற்பட்ட தாமதம்.. காஷ்மீரில் உயிர் தப்பிய 39 சுற்றுலா பயணிகள்!
திருவனந்தபுரம்: கேரளா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 39 பேர் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் நூழிலையில் உயிர் தப்பியுள்ளனர். உணவில் உப்பு அதிகமாக இருந்ததாலும், குதிரை சவாரி செய்வதற்கு அதிகம் ரூபாய் கேட்டதால் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் இவர்கள் 39 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்கள்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

தயார் நிலையில் முப்படை
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் அடாவடியாக ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து இருக்கிறது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் பயந்து போய் இருக்கும் பாகிஸ்தான், என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. முப்படைகளையும் தயார் நிலையில், வைத்து இருக்கவும் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக அங்கு இருந்த ஆண் சுற்றுலாப் பயணிகளிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சும்மா விட மாட்டோம் என்று இந்தியா எச்சரித்து உள்ளது.
உணவில் உப்பு அதிகம்
இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இயல்பாக சில சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் சிலர் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. அதாவது உணவில் உப்பு அதிகம் இருந்தது, குதிரை சவாரி செல்ல அதிக நேரம் பிடித்தது என்பது உள்ளிட்ட காரணங்களால் 39 பேர் உயிர் தப்பியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ், அவரது மனைவி லாவண்யா மற்றும் குழந்தைகள், அத்தை, மாமா என்று 11 பேர் கடந்த 19 ஆம் தேதி ஸ்ரீநகர் சென்று இருக்கிறார்கள். குல்மார்க், சான்மார்க் பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு 22 ஆம் தேதி பஹல்காமுக்கு புறப்பட்டு இருக்கிறார்கள். காஷ்மீரில் சுற்றுலா சென்ற போது, இரண்டு நாட்களாக மதியம் சாப்பிட முடியாமல் போனது.
பிரைட் ரைஸ் சாப்பிட்டனர்
அதனால் போகும் வழியில் சாப்பிடுவதற்கு காரை நிறுத்தும்படி மற்றொரு காரில் முன்னால் சென்று கொண்டிருந்த மனைவி லாவண்யாவிடம் ஆல்பிஜார்ஜ் கூறியுள்ளார். உடனே, லாவண்யாவும் சாலையோர ஹோட்டல் ஒன்றில் காரை நிறுத்தி இருக்கிறார். அங்கிருந்து பஹல்காமுக்கு 15 நிமிடத்தில் செல்ல முடியும். ஹோட்டலில் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். அதில், உப்பு அதிகமாக இருந்ததால், சாப்பிட முடியாமல் கொட்டி இருக்கிறார்கள்.
இதனை கவனித்த கடை ஊழியர்கள் ஏன், கொட்டுகிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் உப்பு அதிகமாக உள்ளது என்று கூறியதால், காத்திருங்கள் எனக் கூறி மீண்டும் பிரைட் ரைஸ் போட்டு கொடுத்து இருக்கிறார்கள். இதை சாப்பிட்டு கிளம்ப 30 நிமிடம் தாமதம் ஆகியுள்ளது. பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். பைசரனை அடைவதற்கு 2 கிலோ மீட்டர் தூரம் தான் இருந்துள்ளது.
விபரீதம் நடந்ததை உணர்ந்தனர்
அப்போது, எதிரே குதிரைகள் பதட்டத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தது. கார்களும் மின்னல் வேகத்தில் திரும்பி கொண்டிருந்தன. மக்கள் ஒரு பீதியில் இருந்ததை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்த ஆல்பிஜார்ஜ் ஒரு காரை நிறுத்தி என்ன நடக்கிறது என்று கேட்டு இருக்கிறார். இதற்கிடையே, "மத்திய பாதுகாப்பு படையினருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு. சீக்கிரம் முடிந்து விடும்" என்று ஒரு கார் டிரைவர் கூறி இருக்கிறார்.
அதை கேட்டதும் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது. நாமும் திரும்பி விடுவோம் என்று ஸ்ரீநகர் ஏரி பகுதியில் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 4.30 மணிக்கு சென்றிருக்கிறார்கள். அதற்குள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அங்கு அமைதியான சூழல் நிலவியிருக்கிறது. பின்னதான் அங்கு என்ன நடந்தது என்ற முழு விவரமும் தெரியவந்துள்ளது. உணவில் உப்பு அதிகமாக இல்லாமல் இருந்து இருந்தால் என்ன ஆகியிருக்குமோ என உயிரிழந்தவர்கள் குறித்து வேதனையுடன் ஸ்ரீநகரை விட்டு அந்த குடும்பம் கிளம்பியிருக்கிறது.
மகாராஷ்டிராவை சேர்ந்த குடும்பத்தினர்

இதேபோல, மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாப்பூர், சங்லி, ரத்னகிரி மற்றும் புனே உள்ளிட்ட சேர்ந்த 28 பேர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள். அவர்கள் பஹல்காம் பகுதிக்கு புறப்பட தயாராக இருந்துள்ளனர். அப்பொது, அவர்களை அழைத்து செல்லும் குதிரைகள் கிடைப்பதற்கு தாமதம் ஆகியுள்ளது. அதாவது குதிரை சவாரி செல்ல ஒரு ஆளுக்கு 3,200 கேட்டு இருக்கிறார்கள்.
இதை குறைப்பதற்கு சுற்றுலா பயணிகள் பேரம் பேசிய போது, அந்த வழியாக டாக்சி டிரைவர் ஒருவர், அங்கே செல்லாதீர்கள், துப்பாக்கிச்சூடு நடக்கிறது என எச்சரித்துவிட்டு சென்று இருக்கிறார். இதனால் அங்கு செல்வதை தவிரித்து இருக்கிறார்கள். இதனால் அவர்கள் 28 பேரும் உயிர் தப்பியுள்ளனர். கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பியிருந்தால் அவர்கள் உயிருக்கும் எதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும், நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பதற்றமான சூழல்
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் அந்நாட்டின் தூதரக அதிகாரிகளை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று நேற்றிரவு மத்திய அரசு கூறிய நிலையில் இன்று ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறவும் மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
சிந்து நதி ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக இந்தியா உத்தரவிட்டதால், 80 சதவிகித விவசாயம் பாகிஸ்தானில் பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தான் கதறல் அதிகரித்துள்ளது. மேலும் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று கூறி பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி படைகளை தயார் செய்து வருகிறது. முப்படைகளும் தயார் நிலையில் இருந்து வருகிறது. பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றும் மோடி கூறினார். இன்று இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமும் நடந்தது. பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications