கேரளா: ரயில் பயணிகளுக்கு தீ வைத்த ஷாருக் சைபி உ.பி.யில் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: கேரளா ரயிலில் பயணிகளை தீ வைத்து படுகொலை செய்ய முயன்ற ஷாருக் சைபி என்ற நபர் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்த போது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆலப்புழா- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்த நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் சக பயணி மீது தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் பயணிகள் 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது தண்டவாளத்தில் 3 உடல்கள், தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. தவ்பீக், ரெஹானா மற்றும் ஒரு குழந்தை ஆகியோரது உடல்களே தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டன.

ரயிலில் பயணம் செய்த நபர், எதிரே உட்கார்ந்திருந்த தவ்பீக், ரெஹ்னா உள்ளிட்டோர் மீது ஸ்பிரே மூலம் பெட்ரோல் தெளித்துள்ளார். பின்னர் அவர்கள் மீது தீ வைத்து விட்டு ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி குதித்தார். அந்த ரயிலை பின் தொடர்ந்து டூ வீலரில் வந்தவருடன் அந்நபர் தப்பி சென்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர. இதனைத் தொடர்ந்து அந்த நபரின் உருவ படம் வெளியிடப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த ஷாருக் சைபி என்ற அந்நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications