கேரள லாட்டரியில் தமிழக வியாபாரிக்கு கொட்டிய கோடிகள்.. விஷூ பம்பரில் அடித்த “டபுள்” யோகம்
திருவனந்தபுரம்: சமீபத்தில் விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் இரண்டு பரிசுகளை தட்டி தூக்கியுள்ளார் தமிழக வியாபாரி. கேரளாவில் ஏஜென்சி ஆரம்பித்த 6 மாதத்திற்குள் இவரது ஏஜென்சியில் முதல் முறையாக பம்பர் டிக்கெட்டில் முதல் பரிசு அடித்துள்ளது. விஷு பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி மற்றும் இரண்டாம் பரிசு இவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட லாட்டரி டிக்கெட் தானாம். இதனால் பரிசுத் தொகையில் இவருக்கும் கமிஷனாக கிடைக்கும். பாலக்காடில் உள்ள இவரது ஏஜென்சியில் வாங்கிய டிக்கெட்டுக்கு தான் இந்த முதல் பரிசு அடித்துள்ளது.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வருகின்றன. பம்பர் லாட்டரிகளில் அதிகபட்சமாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு மட்டும் ரூ.25 கோடி முதல் பரிசாக வழங்கப்படுகிறது.

தமிழக வியாபாரிக்கு கொட்டிய யோகம்
சீசனுக்கு ஏற்றார் போல் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. இதில் விஷூ பம்பர் லாட்டரி கடந்த 2 மாதங்களாக கேரளாவில் விற்கப்பட்டது. இதற்கு முதல் பரிசு ரூ.12 கோடி ஆகும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும் சுமார் 40 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த வாரம் விஷூ பம்பர் லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடந்தது.
இதில் முதல் பரிசு ரூ.12 கோடி VD 204266 என்ற டிக்கெட்டுக்கு விழுந்தது. இரண்டாவது பரிசு ரூ.1 கோடி ஆகும். மொத்தம் உள்ள ஆறு சீரிஸ்களில் ஒரு சீரிசில் உள்ள ஒரு எண் என மொத்தம் 6 டிக்கெட்டுகளுக்கு 1 கோடி பரிசாக அளிக்கப்படும். இந்த முதல் இரண்டு பரிசுகளுமே தமிழ்நாட்டை சேர்ந்த வியாபாரியான யஷ்வந்த் ஏஜென்சியில் விற்ற டிக்கெட் என்பது தெரியவந்துள்ளது.
பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்
தமிழ்நாட்டை சேர்ந்த யஷ்வந்த என்பவரது ஏஜென்சியில் தான் ரூ.12 கோடி பரிசு அடித்துள்ளது.
பாலக்காடு கோட்டுரோடில் விற்ற டிக்கெட்டுக்கு தான் ரூ.12 கோடி பரிசு அடித்துள்ளது. யஷ்வந்த் ஏஜென்சி கடந்த நவம்பர் மாதம் தான் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கப்பட்டதாம். தொடர்ந்து பல்வேறு இடங்களில் யஷ்வந்த் ஏஜென்சியை ஆரம்பித்துள்ளார்.
இதில் விஷூ பம்பருக்கான ரூ. 12 கோடி முதல் பரிசு பாலக்காடு கோட்டுரோட் எஜென்சியில் விற்ற டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு அடித்து உள்ளது. இரண்டாம் பரிசும் இவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட் தானாம். முதல் இரண்டு பரிசுகள் இவரது ஏஜென்சியில் அடித்து இருப்பதால் மிகுந்து மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.
மகிழ்ச்சியை கொடுத்துள்ளது
இது பற்றி அவர் கூறுகையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் முதல் முறையாக இங்கு லாட்டரி ஏஜென்ஸி வைத்தோம். முதலில் குறைவான டிக்கெட்டுகள் விற்றன. பிறகு கிளைகளை அதிகமாக ஆக்கினோம். கோழிக்கோடில் தான் முதலில் ஆரம்பித்தோம். பிறகு பாலக்காடு, ஆரியங்காவு, புனலூர், கல்லூர், கொச்சி என பல்வேறு இடங்களில் யஷ்வந்த் ஏஜென்சியை ஆரம்பித்தோம். இதுவரை 3 பம்பர்கள் டிக்கெட்டுகள் விற்றுள்ளோம்.
ஒவ்வொரு பம்பரிலும் 1 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்றோம். இந்த முறையும் 1 லட்சம் வரையிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. மழை என்பதால் கொஞ்சம் சேல்ஸ் கம்மியாகிவிட்டது. இப்போது செலிபிரேஷன் செய்து வருகிறோம். எங்களுடைய எல்லா கிளைகளிலும் இந்த கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதல் பரிசு அடித்த நபர் இன்னும் வரவில்லை. கூடிய விரைவில் வந்து பெற்றுக் கொள்வார். முதல் முறையாக எங்கள் ஏஜென்சியில் முதல் பரிசு அடித்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழருக்கு வாய்ப்பு?
இரண்டாவது பரிசும் எங்கள் ஏஜென்சியில் விற்ற டிக்கெட்டுக்கு தான் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு என இரண்டு டிக்கெட்டுகள் இவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட் என்பதால், பரிசுத்தொகை கமிஷனாக இவருக்கும் கோடி ரூபாய் கிடைக்கும்.
விஷூ பம்பர் லாட்டரியில் மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சமும், நான்காவது பரிசாக ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும். கோடை விடுமுறை என்பதால் கேரளாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கூட ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி செல்வதால், தமிழகர்கள் யாருக்கேனும் அடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications