Kerala Lottery: ரூ.12 கோடி.. பண மழை கொட்ட போகுது! கேரள விஷு பம்பர் லாட்டரியில் யாருக்கு காத்திருக்கோ அதிர்ஷ்டம்
திருவனந்தபுரம்: கேரளா விஷு பம்பர் லாட்டரி விற்பனை தொடங்கிவிட்டது. BR109 என்ற இந்த விஷு பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படுகிறது. சம்மர் பம்பரில் தான் ரூ.10 கோடி விழாமல் போய்விட்டது.. விஷு பம்பரிலாவது 12 கோடி பரிசை தட்டி தூக்கியே ஆகனும் என்ற ஆசையில் கேரளாவில் சேட்டன்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு மாநில அரசே டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. தினம் தோறும் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் குலுக்கலும் வருடத்திற்கு ஆறு பம்பர் டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. சீசனுக்கு தகுந்தபடி பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுவது வழக்கம்.

விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள்
தற்போது கேரள விஷு பம்பர் புத்தாண்டு காலம் என்பதால் அங்கு விஷு பம்பர் டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும், மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சமும், 4 வது பரிசாக ரூ.5 லட்சமும் அளிக்கப்படுகிறது.
மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. VA, VB, VC, VD, VE, VG ஆகிய சீரியஸ்களில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டிக்கெட்டிற்கான குலுக்கல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. கேரள லாட்டரிகளில் வழக்கமாக பாலக்காடு பகுதியில்தான் டிக்கெட் விற்பனை அதிகம் நடைபெறுவது வழக்கம்.
முதல் பரிசு ரூ.12 கோடி யாருக்கு?
அந்த வகையில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் பாலக்காட்டில் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் காலம் என்றாலும் அங்கு விற்பனை தீயாய் நடைபெற்று வருவதாக லாட்டரி வியாபாரிகள் கூறினர். இனி கோடை விடுமுறை என்பதால் கேரளாவிற்கு தமிழ்நாடு, கர்நாடகா உளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த சுற்றுலாப் பயணிகளில் சிலரும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்குவார்கள் என்பதால், இந்த முறை டிக்கெட் விற்பபனை அதிகமாக இருக்கும் என்று கேரள லாட்டரி விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். முதல் பரிசு ரூ.12 கோடி என்பதால் வாழக்கையில் ஒருநாளாவது நமக்கும் ஒரு அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? கோடீஸ்வரர் ஆகிவிடமாட்டாமோ என்ற எதிர்பார்ப்பில் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.
சம்மர் பம்பர் வின்னர்
முதல் பரிசு ஒரு அதிர்ஷ்ட எண்ணிற்கு மட்டுமே வழங்கப்படும். இரண்டாவது பரிசு 6 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அதாவது ஒரு டிக்கெட்டிற்கு ஒரு கோடி என மொத்தம் ரூ.6 கோடி வழங்கபடுகிறது. மூன்றாவது 10 லட்சம் ரூபாயும் ஆறு டிக்கெட்டிற்கு வழங்கப்படுகிறது. கேரளாவில் இதற்கு முன்பாக நடைபெற்ற சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கலில் பாலக்காட்டில் வாங்கப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது.
கோவையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பத்மநாபன் என்பவருக்கு முதல் பரிசு ரூ.10 கோடி அடித்தது. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்த பத்மநாபன் எப்போதாவது பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவாராம்.. இந்த முறையும் எதேச்சையாக வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. எஸ்பி 517026 என்ற எண்ணிற்குதான் முதல் பரிசு விழுந்தது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications