என் கூட பேசு லிஜி.. புருஷனை விட்டுடுனு கெஞ்சிய மகேஷ்.. மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்
திருவனந்தபுரம்: கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பான வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் லிஜி. இவருடைய தாய்க்கு அங்கமாலி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு தனது தாயை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு இளைஞர் வந்தார்.

அவர் லிஜியிடம் திடீரென வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் லிஜியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த லிஜி சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த செவிலியர்களும் மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர்.
ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். இந்த சம்பவம் நடக்கும் போது அங்கிருந்த மக்களும், மருத்துவமனை ஊழியர்களும் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து வைத்திருந்து அங்கமாலி காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். விசாரணையில் அவர் பெயர் மகேஷ் என்றும் அவர் அலுவா என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியான விசாரணையில் மகேஷும் லிஜியும் காதலித்து வந்ததாகவும் இவர்களின் காதலுக்கு லிஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து லிஜி மகேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இதையடுத்து வீட்டில் பார்த்த வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த திருமணத்திற்கு முன்பே மகேஷ் லிஜியுடன் பேச முயற்சித்தும் அவர் பேச மறுத்துவிட்டார். அது போல் திருமணத்திற்கு பிறகும் லிஜியை சந்தித்து தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மகேஷ் கூறியதாக தெரிகிறது.
மருத்துவனையிலும் இது தொடர்பான வாக்குவாதத்தின் போதுதான் லிஜியை மகேஷ் கத்தியால் பல முறை குத்தினார் என்றும் விசாரணையில் தெரிகிறது. இந்த தகவல்களை தவிர மற்ற தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
-
ED கார் கண்ணாடி உடைப்பு.. சுற்றி வளைத்த தொண்டர்கள்.. பினராயி ரெய்டை முடித்தபோது வெடித்த பூகம்பம் -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications