திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியே போய் செக்ஸ் வச்சிக்கணும்.. இ பாஸ் கொடுங்க.. போலீஸை திடுக்கிட வைத்த கேரள இளைஞர்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: செக்ஸ் வைத்துக் கொள்ள வெளியே போகணும் என போலீஸாருக்கு இ பாஸ் கேட்டு கேரள இளைஞர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை சமாளிக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை.. ஆனால் சரியான சான்றிதழ்கள் அவசியம் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை.. ஆனால் சரியான சான்றிதழ்கள் அவசியம்

தடைவிதிப்பு

தடைவிதிப்பு

தேவையில்லாமல் மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போல் வருபவர்களை கண்காணிக்கும் போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவசர தேவை என்றால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ பாஸ்

இ பாஸ்

இந்த நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இளைஞர் ஒருவர் வினோதமான காரணத்தை கூறி கேரள போலீஸாரிடம் இ பாஸ் கோரினார். கண்ணனூரின் கண்ணபுரத்தில் உள்ள இரினாவே எனும் பகுதியில் வசிப்பவர் இ பாஸ் கோரி விண்ணப்பித்திருந்தார்.

போலீஸார்

போலீஸார்

அதில் செக்ஸிற்காக வெளியே செல்ல வேண்டும் என காரணத்தை குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த நபருக்கு போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்தார். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்த நபரை கைது செய்ய வலப்பட்டணம் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

விசாரணைக்கு பின்னர் தான் செய்தது தவறு என உணர்ந்தார். போலீஸாரிடமும் மன்னிப்பு கோரினார். மேலும் தனது இ பாஸ் கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னர் எழுத்துப்பிழை ஆகிவிட்டது. சிக்ஸ் ஓ கிளாக் என எழுத முற்பட்டு அதை செக்ஸ் என எழுதிவிட்டதாக ஒரு மொக்கையான காரணத்தை சொல்லியதும் அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

English summary
Kerala Youth applies for E Pass citing need to go out for sex
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X