கேரளாவே மிரளுது.. நடிகர் அஜித் பெயரில் காங்கிரஸ் தேர்தலில் 'கள்ள ஓட்டு' சிக்கிய போலி அடையாள அட்டை!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்வு செய்ய நடந்த தேர்தலில் நடிகர் அஜித் படத்தை பயன்படுத்தி கூட போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்வு செய்ய கடந்த சில வாரங்களுக்கு முன்பு உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் வாக்களிக்கும் காங்கிரஸ் கட்சியினர் போலி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தி வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 Kerala Youth Congress election malpractice: Fake voter ID of actor Ajith recoverd by police

இது தொடர்பான புகார் கேரள மாநில தலைமை தேர்தல் ஆணையர் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து போலி வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போலீசாருக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் அங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தேர்தலில் போலி வாக்காளர் அட்டையாள அட்டையை பயன்படுத்தி ஏகப்பட்ட மோசடிகள் நடைபெற்றது தெரியவந்தது.

அஜித் பெயரில் ஓட்டர் ஐடி: மொபைல் செயலி மூலம் போலியாக பிரபலங்களின் படங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கியதாக தெரிவித்தனர். இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அபி விக்ரம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனில் நடிகர் அஜித் படத்தை பயன்படுத்தி கூட போலியாக வாக்காளர் அடையாள அட்டை எடுத்து வைக்கப்பட்டு இருந்ததையும் போலீசார் கைப்பற்றினர்.

இது தவிர பெனி, பினில் பினு என்ற இரு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் வீட்டிலும் போலீசார் ரெய்டு நடத்தினர். இதில் மொத்தம் 24 போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையை வரவேற்றுள்ள இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ராகுல் காந்தி, "நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.

8 பேர் சிறப்புக்குழு: முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார். அதேவேலையில் போலி வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்குவது மிகவும் மோசமான குற்றம் என்றும் இதை பொதுத்தேர்தலிலும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக, விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 8 பேர் கொண்ட சிறப்புக்குழுவை போலீசார் அமைத்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டம் 468 மற்றும் 471 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சியும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. போலி வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்றும் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+