மோகன் லால் வயநாடு விசிட் குறித்து அசிங்கமான கருத்து - கேரளா யூடியூபரை தூக்கிய போலீஸ்
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை கேரள அரசுக்கு வழங்கி உதவி செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடிகர் மோகன் லால் ராணுவ உடையுடன் வயநாடு சென்றிருந்தார். இதுகுறித்து ஒரு யூடியூபர் பரப்பிய அவதூறு கருத்து மலையாள திரையுலகை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. ராணுவம் மீட்புப் பணிகளை முடித்து சென்ற நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் வயநாட்டில் பாதிக்கப்பட்ட இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதனிடையே மலையாள சினிமா சூப்பர் ஸ்டாரும், லெப்டினன்ட் கர்ணலுமான மோகன் லால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ராணுவ உடையில் சென்று கடந்த வாரம் பார்வையிட்டார். மோகன் லால் மெட்ராஸ் 122 பட்டாலியனில் 16 ஆண்டுகளுக்கு மேலாக அங்கம் வகிப்பதால் அவர் ராணுவ உடையில் சென்றிருந்தார். மேலும், மோகன் லாலின் விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டிருந்தது.
மோகன் லாலின் வயநாடு விசிட் குறித்து, அஜூ அலெக்ஸ் என்ற யூடியூபர் அவதூறு பரப்பும் வகையில் முன்வைத்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் 'Chekuthan' என்கிற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சேகுதன் என்றால் பேய் என்று அர்த்தமாம். அந்த சேனலுக்கு சுமார் 1.59 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். அலெக்ஸ் தன் யூடியூப் சேனலில், "மோகன் லால் அங்கிருப்பவர்களின் நேரத்தை வீணடிப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு தன்மானமே இல்லை." என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இதுகுறித்து மலையாள திரைக்கலைஞர்கள் சங்கம் பொதுச்செயலாளர் நடிகர் சித்திக் காவல்துறையில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறை, அஜூ அலெக்ஸை நேற்று கைது செய்தனர். அலெக்ஸ் இதேபோல கடந்தாண்டு நடிகர் பாலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டிருந்த வீடியோ தொடர்பாக, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மலையாள திரைக்கலைஞர்கள் கூறுகையில், "சில யூடியூபர்கள் தங்களின் வியூஸ்க்காக நடிகர்கள் குறித்து அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மோகன் லால் லெப்டினன்ட் கர்ணல் என்ற அடிப்படையில் வயநாடு சென்றார். அதை எல்லோரும் பாராட்ட வேண்டியதில்லை. அதேநேரத்தில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்காமல் இருந்தால் போதும். தொடர்ந்து எல்லை மீறுவதை பொறுக்க முடியாது ."
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications