‛‛அயோத்தி ராமர் கோவிலை எதிர்க்க கூடாது’’.. வரவேற்று பேசிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்!
திருவனந்தபுரம்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி சாஹிப் தங்கல் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு ராமர் கோவில் என்பது இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் மக்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது. இதனால் எதிர்ப்பதை விட்டுவிட்டு மதசார்பின்மையை வளர்க்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 500 ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வந்தது. இந்த பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு காணப்பட்டது. அதாவது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

அதோடு மசூதி கட்ட தனியாக 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலுக்கு 2020ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கோவிலில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பூஜைகள் செய்தார். அதன்பிறகு கடந்த மாதம் 23ம் தேதி முதல் பக்தர்கள் தினமும் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரளா தலைவர் சாதிக் அலி சாஹிப் தங்கல் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
கேரளா பால்படா நகரில் நடந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் தேவையாக இருக்கிறது. பல மக்களின் கனவாக இருந்த ராமர் கோவில் இப்போது நிஜமாகி உள்ளது. அதேபோல் தீர்ப்பின் ஒருபகுதியாக பாபர் மசூதியும் கட்டப்பட வேண்டும். பாபர் மசூதி கட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர் சார்ந்த மதநம்பிக்கை, பழக்க வழக்கங்களை பின்பற்றும் உரிமை உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கட்டப்படும் பாபர் மசூதியும் மதசார்பின்மையின் அடையாளமாக இருக்க வேண்டும். இதனால் அயோத்தி ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தேவையில்லை. அதோடு எதிர்ப்பை விட்டுவிட்டு மதசார்பின்மை கொள்கையை வளர்க்க முன்வர வேண்டும்.
பாபர் மசூதி கரசேவகர்களால் அழிக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். அந்த சமயத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இருப்பினும் சகிப்பு தன்மையை இந்திய முஸ்லிம்கள் கையாண்டர்கள். குறிப்பாக கேரளாவில் உள்ளவர்கள் சகிப்புத்தன்மையுடன் செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இதனால் கேரளா முஸ்லிம்கள் நாட்டுக்கு முன்மாதிரியானவர்களாக உள்ளனர்'' என்றார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரளா தலைவரான சாதிக் அலி சாஹிப் தங்கலின் இந்த கருத்துக்கு அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) சதீசன் கருத்து தெரிவிக்கையில், ‛‛இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஒற்றுமைக்கான கருத்தை தெரிவித்துள்ளேன். மாநிலத்தில் அனைத்து மத மக்களுக்கும் அமைதியான வாழ்க்கை தேவை. சாதிக்கு அலி கூறிய கருத்தை நான் பாராட்டுகிறேன்'' என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications