அன்று அன்னாசி பழம் வெடி வைத்த சில கேரளக்காரர்கள்.. இன்று காட்டுக்குள் பாதுகாப்பு தந்த யானை
திருவனந்தபுரம்: அன்று யானைக்கு வாயில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்தார்கள் சில கேரளக்காரர்கள். ஆனால் இன்று வயநாட்டில் ஒரு யானை காட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இதனை யானையுடன் இருந்த பெண் ஊடகங்களிடமே தெரிவித்துள்ளார். உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய காட்டு யானையின் செயலை பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்கள்.
கடந்த 2020ம் ஆண்டு மலப்புரம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்னன் வெளியிட்ட பதிவு மொத்த இந்தியாவையும் அதிர வைத்தது.. அவர் வெளியிட்ட பதிவில் தான், யானையை கொல்ல அன்னாசி பழத்தில் சிலர் வெடி வைத்துக் கொடுத்தது தெரியவந்தது. அவர் அன்று வெளியிட்ட பதிவில், “உணவுக்காக கர்ப்பிணி பெண் யானை, வனத்தில் இருந்து மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளது. உணவு தேடி சாலைகளில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. அப்போது, அடையாளம் தெரியாத சிலர் அந்த யானைக்கு அன்னாசிப் பழம் கொடுக்கவும், அவர்களை முழுவதுமாக நம்பி அதை ஏற்றுக்கொண்டு வாங்கி இருக்கிறது. அங்கு இருந்த அனைவரையும் பெண் கர்ப்பிணி யானை நம்பி வாங்கி சென்றுள்ளது.

ஆனால் அந்த கர்ப்பிணி பெண் யானை, அன்னாசி பழத்தை உண்ணத் தொடங்கியதும் அது வாயிலே வெடித்திருக்கிறது. அதில் அன்னாசிப் பழத்தில் வெடி மருந்தை நிரப்பி அளித்திருக்கிறார்கள் சில மோசமான மனிதர்கள். தனக்குள் வெடிமருந்து வெடித்தபோது, நிச்சயம் அந்த பெண் யானை தன்னைக் குறித்து சிந்தித்திருக்க மாட்டாள். அவளின் சிந்தனை முழுவதும் அவளின் வயிற்றில் இருக்கும் குட்டி மீதுதான் இருந்திருக்கும்" என்று வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்னன் கூறியிருந்தார்.
வாயில் வெடித்த வெடிமருந்து அதிக சக்தி கொண்டதாக இருந்த காரணத்தால் அந்த யானையின் வாயும் நாக்கும் முழுமையாக சேதமடைந்துள்ளது. மிகக் கடுமையான காயங்களுடன் இருந்த யானை, அங்கு இருந்த யாரையும் தாக்கவில்லை, கோபத்தில் எதுவுமே செய்யாமல் அமைதியாகவே நடந்து சென்றுள்ளது. உணவுக்காக வந்த யானைக்கு இன்னும் உணவு கிடைக்காத நிலையில் கடும் பசி, வாயில் கொடூரமான வலி நரக வேதனையை இரண்டு நாட்களுக்கு மேல் யானை சந்தித்துள்ளது. தண்ணீரில் இறங்கிய யானை . பல மணி நேரம் வலியுடன் இருந்த நிலையில் கடைசியில் இறந்து போனது. இந்த சம்பவம் 2020ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
இந்த சம்பவம் கேரளாவில் உள்ள ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கியது. கர்ப்பிணி பெண் யானை அழித்த கொடூரம் நடந்த கேரளாவில் இன்று யானை, தன் முன் விபத்தில் சிக்கி வந்தவர்களை காப்பாற்றி உள்ளது. வயநாடு முண்டக்கை மற்றும் சூரல் மலை நிலச்சரிவின் போது சிக்கியவர்களை பலரும் காப்பாற்றி வரும் நிலையில், சூரல் மலையில் வெள்ளத்தில் தப்பிய பாட்டி மற்றும் பேத்தியை 3 காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சூரல்மலையைச் சேர்ந்த சுஜாதாவும் அவரின் பேத்தி மிருதுளாவும் கடந்த ஜூலை 30 ஆம் தேதி வழக்கம் போல தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அன்று அதிகலை பலத்த மழை காரணமாக தண்ணீர் வீட்டுக்குள் வந்துள்ளது. தண்ணீர் புகுந்ததால் காப்பாற்றும்படி தனது பேத்தி அழுகுரல் கேட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, பேத்தியை கையில் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அப்படி வெளியேறி சில நொடிகளில் சுஜாதாவின் வீடு இடிந்து தரைமட்டமானது.
அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சுஜாதா பேத்தியுடன் போயிருக்கிறார். ஆனால் அந்த குடியிருப்பும் இடிந்து விழுந்துள்ளது. திரும்பும் திசையெல்லாம் மழையும், சகதியும், மரக்கிளைகளுமாக இருந்ததைகண்ட சுஜாதாவும் அவரது பேத்தியும், நடந்து மேடான பகுதி நோக்கி சென்றனர். சூரல்மலையில் இருந்து உயரமான பகுதியை நோக்கி சுஜாதவும் அவரின் பேத்தி மிருதுளாவும் நடந்து சென்றனர். மிக கனமழைக்கு நடுவே அங்கிருந்த ஒரு காப்பி தோட்டம் ஒன்றில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.
அங்கும் வெள்ளமும் சகதியும் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை நோக்கி 3 யானைகள் வந்தன. அதனைக் கண்டு அதிர்ந்த சுஜாதா, பனை மரம் ஒன்றின் கீழ் தனது பேத்தியை பிடித்தபடி யானைகள் முன் மண்டியிட்டு அழுதுள்ளார். ஏற்கனவே நாங்கள் பெரிய துயரத்தை சந்தித்துள்ளதாகவும், தங்களை தாக்க வேண்டாம் என யானைகளிடம் பாட்டி கெஞ்சினாராம். அவர்களின் வலி உணர்வுகளை புரிந்து கொண்ட யானைகள் கண்ணீருடன் காதை அசைத்த படி நின்றனவாம்.
அத்துடன் தங்களிடம் மன்றாடிய பாட்டியும், பேத்தியையும் யானைக் கூட்டம் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக நின்றனவாம். காலை 6 மணிக்கு வெளிச்சம் வரும் வரையில் அவர்களின் பாதுகாப்பிற்காக நின்ற யானைக்கூட்டம், மீட்புப் பணியினர் வந்ததும் அங்கிருந்து விலகிச் சென்று விட்டனவாம். அன்று யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானையை கொன்ற கேரளாவில் இன்று, அதே யானைகளால் பாட்டியும் பேத்தியும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications