நடிகையின் நிர்வாண வீடியோக்கள்.. வலுவான "ஆதாரம்" சிக்கியது.. பிரபல நடிகர் விரைவில் கைதாகிறார்
நடிகர் விஜய்பாபுவை கேரள போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்கிறார்கள்
திருவனந்தபுரம்: நடிகையின் நிர்வாண வீடியோக்களை காட்டி மிரட்டியதாக கூறப்பட்ட வழக்கில், நடிகர் விஜய்பாபு சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளதாம்.. இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் மும்முரமாகி உள்ளனர்.
நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் பாபுவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை அவர்.. ஏப்ரல் 22ம் தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார்.

நடிகர் விஜய் பாபு
அதில் "கடந்த ஒன்றரை மாதங்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் சுரண்டல்களை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார்... இதைதவிர, பேஸ்புக் பதிவின் மூலமும் அந்த பெண் புகார்களை கண்ணீருடன் கூறினார்.. அதில், "எனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு, என்னை காப்பாற்றுபவராக, எனது மீட்பராக விஜய் பாபு நடந்து கொண்டார். ஆனால் நல்லவர் என்ற போர்வையில், பின்னர் அவர் என்னை பாலியல் ரீதியாக சுரண்டினார்.

ஜாலி மாத்திரை
கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர, விஜய் பாபு மது மற்றும் "ஜாலி மாத்திரை" என்ற போதைப்பொருளையும் உட்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார்... திரையுலகில் அவரது செல்வாக்கு காரணமாக, மற்றவர்களிடம் நான் அனுபவித்த பாலியல் சுரண்டல் பற்றி விவாதிப்பதில் எனக்கு பயம் இருந்து வந்தது. விஜய் பாபுவின் வலையில் மேலும் பல பெண்களும் சிக்கியுள்ளனர் என்று அறிந்தேன். அவர் என்னுடைய நிர்வாண வீடியோவை பதிவு செய்து, அதனை காண்பித்து மிரட்டியுள்ளார்" என்று கூறியிருந்தார்.

நிர்வாண வீடியோக்கள்
அதாவது, அந்த நடிகையை காதலிப்பதாக விஜய்பாபு சொல்லியிருக்கிறார்.. அதை சொல்லியே அந்த நடிகையுடன் 45 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு பிறகுதான், நடிகையின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, தன்னைப்போல நடிகர் விஜய் பாபுவிடம் மேலும் பல பெண்கள் சிக்கி இருப்பதாகவும் அந்த நடிகை தெரிவித்திருந்தது, கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஃபேஸ்புக்
இதனிடையே நேற்று முன்தினம், அந்த நடிகையின் குற்றச்சாட்டுக்கு விஜய்பாபு பேஸ்புக்கில் பதில் தந்தார்.. அதில் நடிகையின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காக விஜய் பாபு மீது ஒரு வழக்கு பதிவானது.. இந்த விஷயம் தெரிந்து, போலீசின் கைதுக்கு பயந்து விஜய்பாபு தலைமறைவாக விட்டார்.. ஆனாலும், அவரை விரைவில் அவரை கைது செய்து விடுவோம் போலீசார் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

போலீசார் விளக்கம்
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு முக்கிய ஆதாரம் போலீசுக்கு சிக்கி உள்ளதாம்.. இது தொடர்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜூ சொல்லும்போது, "விஜய்பாபு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது வீடு மற்றும் அவர் தங்கியிருந்த இடங்களில் சோதனை நடத்தினோம்.. அப்போது சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது... இதன்மூலம் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.

லுக்அவுட் நோட்டீஸ்
இப்போதைக்கு அவர் துபாய் நாட்டில் இருப்பதாக தெரிகிறது. எனவே அவரை பிடிக்க அனைத்து ஏர்போர்ட்களுக்கும் லுக் அவுட் நோட்டீசு வழங்கி உள்ளோம். அவர் வெளிநாட்டில் இருந்து இந்தியா வராமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.. அதேபோல், விஜய்பாபுவை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடவும் கேரள போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.. தன்மீதான பிடி இறுகுவதை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு கோர்ட்டில் முன்ஜாமீன் பெறவும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்..!












Click it and Unblock the Notifications