"கேரளா குண்டுவெடிப்பிற்கு நான்தான் காரணம்.." கொச்சியை சேர்ந்த இளைஞர் போலீஸில் சரண்.. பகீர் தகவல்
கொச்சி: கேரளாவில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.
கேரளாவின் களமச்சேரியில் உள்ள மத வழிபாட்டு அரங்கில் இன்று சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அனைவரும் பிரார்த்தனை செய்து கண்டிருந்த போது திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்ட நிலையில், பிரார்த்தனை கூடத்தில் பல இடங்களில் தீ பற்றியுள்ளது. இதனால் பதறியடித்து கொண்டு அங்கிருந்து பலரும் சிதறி ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அங்குப் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பிற்கு நான்தான் காரணம் என்று கூறி ஒருவர் தானா போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். கொடைகரை போலீஸ் நிலையத்திற்குச் சென்ற அந்த நபர், குண்டுவெடிப்பைச் செய்தது தான்தான் எனக் கூறியுள்ளார். அது தவிர அவர் பெயர், வயது உட்பட வேறு எந்தவொரு தகவலையும் கேரளா போலீசார் பகிரவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றே போலீசார் கருதுகின்றனர்.
அதேபோல திரிஸ்சூரில் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.அவரது பேக்கை பரிசோதனை செய்த போலீசார், அதில் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அவரது பேக்கில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் படங்களை போலீசார் மீட்டுள்ளனர். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த நபரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக முதலில் 15 நிமிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது பதில்கள் சந்தேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications