முதல்ல ஜாலி.. பிறகு சண்டை.. அடித்துகொலை.. கால்களை வெட்டி துண்டாக்கி எரித்து.. அலற வைத்த கொடூரன்!
பியூட்டிஷனை கொன்று வீட்டில் புதைத்த நபர் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்: ஜாலியாக இருந்துவிட்டு... காதலியை கொலை செய்து.. தன் வீட்டிலேயே சடலத்தையும் புதைத்து வைத்த கோட்டயம் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கால்கள் துண்டிக்கப்பட்டு.. எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
கேரளாவில் கொல்லத்தை அடுத்துள்ளது திருக்கோவில்வட்டம் என்ற ஊர்.. இங்கு வசித்து வந்தவர் சுசித்ரா.. இவர் ஒரு அழகு கலை நிபுணர்.. 42 வயதாகிறது.
இவர் கடந்த மார்ச் 18ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வாக வீட்டில் சொல்லிவிட்டு கொச்சி கிளம்பி சென்றுள்ளார்.. ஆனால் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை.. அதனால் கொச்சிக்கு சென்ற தங்கள் மகள் வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் கோட்டயம் போலீசில் புகார் தந்தனர். இதையடுத்து போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.

விசாரணை
முதல் வேலையாக, சுசித்ரா வேலை பார்க்கும் பியூட்டி பார்லருக்கு சென்று விசாரித்தனர்.. தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் 5 நாள் லீவு வேண்டும் என்று கேட்ட சுசித்ரா அதற்கு பிறகு வரவே இல்லை என்று சொன்னார்கள். இதற்கடுத்தப்படியாக சுசித்ராவின் செல்போனை ஆராய்ந்தனர்.. அதில், பாலக்காட்டில் உள்ள பிரசாந்த் என்கிறவரிடம்தான் சுசித்ரா கடைசியாக பேசியது தெரியவந்தது. பிரசாத் ஒரு மியூசிக் டீச்சர்.

கைது
இதையடுத்து போலீசார் விசாரணைக்காக பாலக்காடு சென்று பிரசாந்திடம் விசாரித்தனர்.. அப்போதுதான் சுசித்ராவை கொன்றது பிரசாந்த் தான் என தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்து செய்த போலீசார் நடந்த கொலை பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கொலையை செய்துவிட்டு, சடலத்தை தன் வீட்டில்தான் புதைத்து வைத்திருப்பதாக பிரசாந்த் சொல்லவும் போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர்.. அங்கு சுசித்ராவின் 2 கால்களும் துண்டிக்கப்பட்டிருப்பதை கண்டு அடுத்த அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகராறு - சண்டை
சுசித்ராவின் உடம்பெல்லாம் சிதறி, குதறி கிடந்தது.. அதனை போலீசார் கைப்பற்றினர்.. இந்த கொலை பற்றி பிரசாந்த் சொல்லும் போது, "கடந்த மார்ச் 18-ம் தேதி பிரசாந்த் என் குடும்பத்தினரை வெளியே அனுப்பிவிட்டு சுசித்ராவை என் வீட்டுக்கு வரவழைத்தேன்.. அவருடன் ஜாலியாகவும் இருந்தேன்.. அப்போது எங்களுக்குள் தகராறு வந்து சண்டை போட்டோம்.

சடலம்
அதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நான், டேபிள் லேம்ப் ஒயரை பிடுங்கி சுசித்ராவின் கழுத்தை நெரித்தேன்.. இதில் துடிதுடித்து இறந்துவிட்டார்... இதை பார்த்து பயந்த நான், கொலை விவகாரம் வெளியே தெரிந்தால் ஆபத்து வரும் என்று நினைத்து, கொலையை மூடி மறைக்க முடிவு செய்தேன்.. சடலமாகி கிடந்த சுசித்ராவின் 2 கால்களையும் துண்டித்து.. அவைகளை எரிக்க முயற்சித்தேன்.

விசாரணை
பிறகு உடலை பாலக்காடு ராமநாதபுரம் அருகே உள்ள என்னுடைய வாடகை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டேன்" என்றார். இதையடுத்து தொடர் விசாரணை நடந்தாலும், பெண்ணை கொன்று, தன் வீட்டிற்குள்ளேயே சடலத்தை புதைத்த சம்பவம் கோட்டயத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது!!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications