கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை.. அரசு ஆஸ்பத்திரிகளை ஏன் மூடக்கூடாது? நேரடியாக களமிறங்கிய ஐகோர்ட்!
திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் அருகே அரசு மருத்துவனையில் பெண் டாக்டர், விசாரணைக் கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்திய ஐகோர்ட், டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என்றால் ஆஸ்பத்திரிகளை அரசு ஏன் இழுத்து மூடக்கூடாது? என்று கேள்வி எழுப்பி உள்ளது.
Recommended Video
கேரள மாநிலம், கொல்லம் அருகே நெடும்பனா என்கிற கிராமம் இருக்கிறது. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சந்தீப் (41 வயது) என்பவர் ஆசிரியராக இருக்கிறார். இவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. சந்தீப் கடந்த செவ்வாய்கிழமை குடிபோதையில் தன் பக்கத்து வீட்டுக்கார்களுடன் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது நேரிட்ட கைகலப்பில் அவரது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது

இதனிடையே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் புகார் அளித்துள்ளனர். உடனே போலீசார் நேரில் வந்து ஆசிரியர் சந்தீப்பை கைது செய்தனர். சிறையில் அடைக்கும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அப்படி செய்ய போகும் போது, சந்தீப்பின் காலில் காயம் இருந்ததால், சிகிச்சை அளிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) அதிகாலையில் அவரை கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
பெண் டாக்டர் கொலை: அங்கு பணியில் இருந்த கோட்டயத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் வந்தனா தாஸ் (23) ஆசிரியர் சந்தீப்புக்கு சிகிச்சை அளித்தார். அவரது கால் காயத்துக்கு மருந்து தடவி கட்டு போட்டுக்கொண்டிருந்தார். அப்போது சந்தீப் திடீரென வெறி கொண்டு அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கினார்.
அங்கு இருந்த கத்திரியையும், அறுவை சிகிச்சை செய்வதற்கான கத்தியையும் எடுத்து, தனக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் வந்தனாவை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் அலறித்துடித்தார். மேலும், தன்னை அங்கே சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்த போலீசாரையும் அவர் தாக்கினார்.இதையடுத்து சுதாரித்த போலீசார், ஆசிரியர் சந்தீப்பிடம் இருந்து கத்தியை பிடுங்கி மடக்கினர். அத்துடன் படுகாயம் அடைந்த டாக்டர் வந்தனா தாசை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கைதியால் போலீஸ் கண் முன்னே பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விஷயம், டிவி, சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து கேரளா முழுவதும் டாக்டர்கள் உடனடியாக போராட்டத்தில் குதித்தனர். இதனால் நோயாளிகள் பாதிப்புக்கு ஆளாகினர். மறுபக்கம் மக்கள் டாக்டர் கொலைக்காக கொந்தளித்தனர். பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஐகோர்ட் விசாரணை: ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய இந்த கொலை தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தானாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், கவுசர் எடப்பகத் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு, நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

பய மனநோய்: அப்போது நீதிபதிகள் கூறுகையில், இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதற்கு போலீசார் பயிற்சி பெற்றிருக்கும்,போது, பெண்களை, குழந்தைகளை பாதுகாப்பார்கள் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் ஒரு இளம் டாக்டரை பாதுகாக்க போலீசார் தவறிவிட்டனர். நடந்த சம்பவம் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் ஒருவிதமான ''பய மனநோயை'' (பியர் சைக்கோசிஸ்) ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு ஆஸ்பத்திரிகளை ஏன் மூடக்கூடாது? : இந்தச் சம்பவத்தால் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டிருப்பதற்கு நீங்கள் (அரசு) என்ன சொல்லப்போகிறீர்கள்? டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என்றால் ஆஸ்பத்திரிகளை அரசு ஏன் இழுத்து மூடக்கூடாது? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. நாளை (இன்று) காலை 10.15 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மனித உரிமை ஆணையம்: கேரள மாநில மனித உரிமைக் கமிஷனும் இந்தச் சம்பவத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 7 நாளில் அறிக்கை அளிக்குமாறு கொல்லம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
முதல்வர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். டாக்டர் வந்தனா தாஸ் படுகொலைக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார். "நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. பணியில் உள்ள சுகாதார பணியாளர்களை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவத்தில் முழு விசாரணை நடத்தப்படும். டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மீதான தாக்குதல்களில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications