சபதம் போட்டு மீசையை இழந்த கேரளா இடதுசாரி தொண்டர்.. வைரலாகும் வீடியோ!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஆளும் இடது முன்னணி தோல்வி அடைந்ததால் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தனது மீசையை இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேலும் நகராட்சிகளிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணியைச் சேர்ந்த LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை மழித்துள்ளார். பத்தனம்திட்டாவில் எல்டிஎஃப் வெற்றி பெறவில்லை என்றால், தனது மீசையை மழித்து விடுவதாக அக்கட்சியின் தீவிர தொண்டரான பாபு வர்கீஸ், தேர்தலுக்கு முன்னதாக அப்பகுதியினரிடம் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை காங்கிரசின் UDF வென்றுள்ளது. முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
பத்தனம்திட்டாவில் யுடிஎஃப் வெற்றி பெற்று, இடது முன்னணி தோல்வியைச் சந்தித்தது. இதனால், தான் தேர்தலுக்கு முன்பு சொன்னதுபோலவே தனது மீசையை எல்டிஎஃப் தொண்டர் வழித்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications