கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் கேரளாவில் வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? அவர்கள் யார் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரிகள் கூட்டணி 2 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்த முறை கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறையை போல் இந்த முறையும் மும்முனை போட்டி நிலவுகிறது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி (யூடிஎஃப்), ஆளும் இடதுசாரிகள் கூட்டணி (எல்டிஎஃப்) மற்றும் பாஜக கூட்டணி இடையே தான் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் கூட்டணிகள்: காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை பொறுத்தமட்டில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (ஜோசப்), கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியை பொறுத்தமட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் (எம்) ஆகியவை உள்ளன. பாஜக கூட்டணியை பொறுத்தமட்டில் பாஜக மற்றும் பிடிஜேஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
பிற மாநிலங்களை போல் கேரளாவிலும் வெவ்வேறு ஜாதி, மதங்களை சேர்ந்த மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் அங்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பிட்ட ஜாதி, மதங்களை சேர்ந்த மக்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் கேரளாவில் உள்ள பிரதான ஜாதி மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் யார்? அவர்கள் வரும் லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
கேரளாவை பொறுத்தவரை பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். இதில் அதிகபட்சமாக ஈழவர்கள் உள்ளனர். இவர்கள் மாநில மக்கள் தொகையில் 29 சதவீதம் வரை உள்ளனர். ஓபிசி பிரிவில் உள்ள ஈழவ சமுதாயத்தினர் இடதுசாரிகள் கட்சிகளின் கூட்டணி (எல்டிஎஃப்) பாரம்பரிய வாக்கு வங்கியாக உள்ளனர். அதாவது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த சமுதாயத்தினரின் ஆதரவு உள்ளது.
இந்த சமுதாயத்தினர் எஸ்என்டிஎப் யோகம் என்ற அமைப்பில் ஒன்றாக இருந்து வந்தனர். கடந்த 2015ல் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பிடிஜேஎஸ் எனும் பாரத் தர்ம ஜன சேனா எனும் அரசியல் கட்சியை உருவாக்கினர். இந்த கட்சி கடந்த 2016 கேரளா சட்டசபை தேர்தலில் இருந்து பாஜக கூட்டணியில் உள்ளது. இந்த அரசியல் கட்சி மூலம் ஈழவர்களின் ஓட்டுகளை கவர பாஜக முயன்று வருகிறது. ஆனாலும் பாஜகவின் இந்த முயற்சி என்பது இன்னும் கைக்கொடுக்கவில்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் 4 தொகுதிகளில் பிடிஜேஎஸ் போட்டியிட்டு 1.88 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. அதேபோல் 15 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 13 சதவீத ஓட்டுகள் பெற்று ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2021 சட்டசபை தேர்தலின்போது பாக கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்ட பிடிஜேஎஸ்ஸின் ஓட்டு சதவீதம் 1.06 சதவீதமாக சரிந்ததோடு, ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. அந்த தேர்தலில் பாஜக 113 தொகுதிகளில் களமிறங்கிய நிலையில் ஓட்டு சதவீதம் 11.30 என சரிந்தது. இந்த தேர்தலில் பல தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இப்படி ஈழவ சமுதாயத்தினரின் ஆதரவால் தான் கேரளாவில் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலிலும் இந்த சமுதாய மக்களின் ஆதரவு என்பது ஆளும் இடதுசாரிகள் கூட்டணிக்கே உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக 16 இடங்களில் போட்டியிடும் சூழலில் அதன் கூட்டணியில் பிடிஜேஎஸ் மீண்டும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிடிஜேஎஸ் தலைவர் துஷார் வெல்லபள்ளி கோட்டயத்தில் போட்டியிடுகிறார். மேலும் மத்திய அமைச்சர் முரளீதரன் பாஜக வேட்பாளராக அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த 2 தொகுதிகளில் ஈழவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் உள்ளனர்.
முஸ்லிம்கள்: கேரளாவில் 2 வது பெரிய சமுதாயமாக முஸ்லிம்கள் உள்ளனர். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர். கேரளாவை பொறுத்தவரை முஸ்லிம்களின் ஓட்டு என்பது ஐயூஎம்எல் எனும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கே உள்ளது. இந்த கட்சி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணியில் உள்ளது. இதனால் முஸ்லிம்களின் ஓட்டு காங்கிரஸ் கூட்டணிக்கே கிடைக்க உள்ளது.
மேலும் கடந்த 20 ஆண்டுகளாக கேரளாவில் முஸ்லிம்கள் சார்பில் பல அரசியல் கட்சிகள் உருவாகி உள்ளன. இருப்பினும் முஸ்லிம்களுக்கான நிரந்தர அரசியல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தான் உள்ளது. அதோடு கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, மலப்புரம், வடகரா, கண்ணூர், பொன்னானி, காசர்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக முஸ்லிம்கள் தான் உள்ளன. இது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக உள்ளது.
அதேவேளையில் முஸ்லிம்களின் ஒட்டுகளை ஈர்க்க ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் சன்னி முஸ்லிம்களை கவருவதற்கான வேலைகளில் சிபிஎம்எம் மேற்கொண்டு வருகிறது. நடைபெற உள்ள தேர்தலில் சிஏஏ கொண்டு வரப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் ஓட்டுகளை கவரும் வகையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. இருப்பினும் முஸ்லிம்களின் ஓட்டுகள் என்பது காங்கிரஸ் கட்சிக்கே காலம் காலமாக கெட்டியாக விழுந்து வருகிறது. இது வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கலாம்.
கிறிஸ்தவர்கள்: கேரளாவில் 18 சதவீத மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். குறிப்பாக கேரளாவின் மத்திய பகுதியில் வெற்றியை நிர்ணயிப்பது கிறிஸ்தவர்கள் தான். ஆனாலும் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக உள்ளனர். இருப்பினும் கேரளா காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவர்களுக்கான காங்கிரஸாக அங்கு பார்க்கப்படுகிறது. இதனால் கணிசமான ஓட்டுகளை அந்த கட்சி பெறுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்து முன்னணி தலைவர்களாக இருந்தவர்கள் சமீபத்தில் மரணமடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை ஈர்க்க பாஜக முயன்று வருகிறது. ஆனால் மணிப்பூரில் நடந்த கலவரம் என்பது பாஜகவுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த முறை கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் கேரளா காங்கிரஸ் கட்சிக்கு செல்வதை தடுத்து அறுவடை செய்ய காங்கிரஸ் மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
மேலும் கேரளாவில் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களின் குழு தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது கத்தோலிக்க திருச்சபையில் நிர்வாகி ரீதியான பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு தருவதில்லை என காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கிறிஸ்தவர்களுக்கு அதிருப்தி உள்ளது. இது எந்த அளவுக்கு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் உயர்ஜாதி கிறிஸ்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இது கிறிஸ்தவர்களை அணுக பாஜகவுக்கு சிறந்த வழியாக அமைந்துள்ளது.
நாயர்: கேரளாவில் உயர்ஜாதி இந்துவாக நாயர் சமுதாயத்தினர் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம் அளவுக்கு நாயர்கள் உள்ளனர். இவர்கள் தான் அரசியல் மற்றும் மாநில அரசு பதவிகளில் கேரளாவில் அதிகாரமிக்க நபர்களாகவும், ஆதிக்கம் செலுத்தும் நபராகவும் வலம் வருகின்றனர். இந்த நாயர் சமுதாயத்துக்கு என்எஸ்எஸ் எனும் நாயர் சர்வீஸ் சோசைட்டி எனும் அரசியல் பிரிவு உள்ளது. இது கடந்த 1995ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கலைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை இந்த அரசியல் பிரிவு கேரளாவில் ஜொலிக்காத நிலையில் உள்ளது. மேலும் நாயர் சமுதாயத்தினர் அனைத்து கட்சிகளிலும் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் உள்ள 21 அமைச்சர்களில் 7 பேர் நாயர் சமுதாயத்தை சேர்ந்தவர். 2021 சட்டசபை தேர்தலில் நாயர் சமுதாயத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கிளம்பினர். வரும் லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் நாயர் சமுதாயத்தினர் தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்கிறார்கள்.
ராஜீவ் சந்திரசேகர்: தற்போது திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான சசிதரூரை ‛அசல் நாயர்' என என்எஸ்எஸ் அமைப்பு பாராட்டியது. திருவனந்தபுரத்தில் நாயர் ஓட்டுகள் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும். ஏற்கனவே 3 முறை இங்கு வெற்றி பெற்ற சசிதரூர் மீண்டும் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். ராஜீவ் சந்திரசேகரும் நாயர் சமுதாயத்தை சேர்ந்தவர். இருப்பினும் ராஜீவ் சந்திரசேகரை விட சசிதரூருக்கு நாயர் சமுதாயத்தின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ள கேசி வேணுகோபால், ரமேஷ் சென்னிதாலா, கே முரளீதரன் (வடகரா காங்கிரஸ் எம்பி) உள்ளிட்டவர்கள் நாயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்ட் ஆகும்.
அதேபோல் நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த சுரேஷ் கோபியும் நாயர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதன்மூலம் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் மூலம் நாயர் ஓட்டுகளை இழுக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது.
தலித்: கேரளாவில் மொத்த மக்கள் தொகையில் தலித் 9 சதவீதம் பேர் அடங்குவர். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கரிஸ் கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளனர். தலித் மக்கள் நலனுக்காக பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் தலித் மக்களின் ஓட்டுகள் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிக்கு தான் கிடைத்து வருகிறது.
கேரளாவை பொறுத்தவரை ஆலத்தூர் மற்றும் மாவிலிக்கரா என 2 தனித்தொகுதிகள் உள்ளன. கொடிகுன்னில் சுரேஷ் என்பவர் மாவிலிக்கரா தொகுதியில் 6வது முறையாக எம்பியாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் தான் கேரளாவில் தலித் மக்களின் முகமாக அறியப்படுகிறார். அதேபோல் கேரளாவில் அமைச்சராக உள்ள கே ராதாகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக உள்ளார். இவரை அந்த கட்சி வரும் லோக்சபா தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் களமிறக்கி உள்ளது. இவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மத்திய கமிட்டி உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா











Click it and Unblock the Notifications