சபரிமலைக்குள் பெண்கள் நுழைய கூடாது.. கேரளாவில் சட்டசபை முற்றுகை.. மாபெரும் போராட்டம்
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். பெண்களும் கூட இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
|
பெரிய அளவில் கூட்டம்
கடந்த சில நாட்களாக சில இடங்களில் நடந்து இப்போது பெரிய போராட்டமாக மாறியுள்ளது. முக்கியமாக பெண்கள் அதிக அளவில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். கேரளா பாஜக தொடங்கி பல கட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்துத்துவா அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.
|
சட்டசபை முற்றுகை
இந்த நிலையில் போராட்டத்தின் ஒரு கட்டமாக அங்கு சட்டசபை முற்றுகை செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்காக அவசர சட்ட திருத்தம், கொள்கை முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
|
தூங்குவோம்
அதோடு சபரிமலை கோவிலுக்கு செல்லும் பாதை முழுக்க தூங்க போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் உள்ளே நுழையாத அளவிற்கு தூங்க போகிறோம் என்று அவர்கள் கூறி உள்ளனர். பெரும்பாலும் இந்த போராட்டத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த பெண்கள்தான் அதிகமாக கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளே விட மாட்டோம்
அதேபோல் இன்னும் 48 மணி நேரத்திற்கு பின், பெண்கள் அந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. என்ன நடந்தாலும் நாங்கள் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று இந்து அமைப்புகள் சபதம் ஏற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications