திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனமழை.. விமானம் சறுக்கி விபத்துக்குள்ளாக 'ஹார்ட் லேண்டிங்' காரணம்.. மத்திய அமைச்சர் தகவல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் இருமுறை விமானத்தை தரையிறக்க முயற்சித்த விமானி 2ஆவது தடவை மிகவும் கடினமாக தரையிறக்கினார் (Hard Landing) என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கோழிக்கோடு விமான விபத்து.. இரண்டாக உடைந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

    இதுகுறித்து அவர் தனது கூறுகையில் கோழிக்கோடு விமான விபத்து மிகவும் வேதனையான சம்பவம். துரதிருஷ்டவசமானதும் கூட. கோழிக்கோட்டில் கனமழை பெய்த காரணத்தால் விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என தெரிகிறது.

    MEA MoS says about Kozhikode plane crash incident

    இரண்டாவது முறையாக தரையிறக்கும் முயற்சியின் போது விமானம் தரையிறங்கியது. ஆனால் கடினமான தரையிறங்கல் முறைப்படி அது இறங்கிவிட்டது. இதனால் ஓடுதளத்தை தாண்டி சறுக்கி விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது என தெரிவித்துள்ளார்.

    துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கனமழை காரணமாக தரையிறங்கும் போது சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் பெய்து வரும் பேய் மழை காரணமாக மூணாற்றில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    MEA MoS says about Kozhikode plane crash incident

    அந்த அதிர்ச்சியிலிருந்து சுதாரிப்பதற்குள் கோழிக்கோடு விமான விபத்து நடந்துவிட்டது. இந்த விபத்து குறித்து தகவல்களை பெற இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. கோழிக்கோடு விபத்து- வெளியுறவு அமைச்சகத்தின் 24 மணிநேர உதவி எண்கள்

    1800 118 797

    +91 11 23012113

    +91 11 23014104

    +91 11 23017905

    ஃபேக்ஸ் : +91 11 23018158

    இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    English summary
    Ministry of State for External Affairs V Muraleedharan says that pilot lands the plane in second attempt with hard landing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X