ஸ்டேட் விட்டு ஸ்டேட்.. நேரடியாக குதித்த திமுக.. தேசிய அளவில் இறங்க முடிவு? அலர்ட்டான ஆர். என் ரவி!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கு எதிராக நடக்கும் மாநில சிபிஎம் அரசின் போராட்டத்தில் தற்போது திமுகவும் கலந்து கொண்டு உள்ளது.
பாஜக அல்லாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில முதல்வர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. பாஜக அல்லாத மாநில அரசுகள் திட்டங்களை நிறைவேற்றுவதை தடுக்கும் விதமாகவும், மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் வகையிலும் ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
திமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, கேரளா சிபிஎம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த புகார்களை வைத்து வருகின்றன.

கேரளா
முக்கியமாக கேரளாவில் ஆரிப் கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு மோதல் நிலவி வருகிறது. அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார். இதையடுத்து அங்கு முதல்வர் பினராயி விஜயன் ஆரிப் கானை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அங்கு மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் எதையும் ஆளுநர் ஏற்பது இல்லை. டெல்லிக்கு அனுப்புவது இல்லை. தனக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கைது செய்யவும் கூட ஆளுநர் உத்தரவிடுகிறார்.

சர்ச்சை
தினமும் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார். மாநில முதல்வர் பினராயி விஜயனும் ஆளுநருக்கு எதிராக அதிரடி கருத்துக்களை தெரிவித்துவிட்டார். நீங்கள் உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுங்கள் என்று அதிரடியாக எதிர்ப்புகளை காட்டி விட்டார். ஆனாலும் ஆளுநர் ஆரிப் அடக்காமல் தொடர்ந்து மாநில அரசுக்கு இடைஞ்சல்களை கொடுத்து வருவதாக சிபிஎம் கூட்டணி அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

என்ன நடந்தது?
இதையடுத்து அங்கு சிபிஎம் தலைமையில் எல்டிஎப் கூட்டணி சார்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிபிஎம் கூட்டணி அரசு சார்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது திமுக சார்பாக திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டுள்ளார். ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான போராட்டம் என்பதால் திமுக தனது பிரதிநிதியை அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆளுநரின் அத்துமீறலை எதிர்க்க சிபிஎம் ஆதரவு அளிக்கிறது. அதைப்போலவே கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக திமுக களமிறங்கி உள்ளது.

போராட்டம்,
ஆளுநர் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். திமுக சார்பாக எம்பி அல்லாமல் கன்னியாகுமரி நிர்வாகிகள் சிலர் அடங்கிய டீமும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறது. திமுகவின் இந்த ஒவ்வொரு மூவையும் ஆளுநர் ரவி தரப்பு தீவிரமாக கவனித்து வருகிறதாம். தனக்கு எதிரான எதிர்ப்புகளை ஆளுநர் தரப்பு நோட்டமிட்டு வருகிறதாம். இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், ஆளுநர்களின் அத்துமீறலுக்கு எதிராக திமுக ஜனநாயக ரீதியாக போராடும்.

நேஷனல் லெவல்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல்களை கேள்வி கேட்போம். தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று கூறி உள்ளனர். முன்னதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications