திடீரென காணாமல் போனதற்கு இதுதான் காரணம்! போட்டு உடைத்த நஸ்ரியா.. என்ன சொல்லியிருக்காருனு பாருங்க
திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகையும், பிரபல நடிகர் ஃபகத் ஃபாசிலின் மனைவியுமாக அறியப்படும் நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி அவர் தனது ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக ஷேராகி வருகிறது.
நேற்று கேரள திரைப்பட விமர்சகர் விருது நஸ்ரியாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது நஸ்ரியா சோஷியல் மீடியாவில் தனது கடிதத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில், "அனவைரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பொதுவெளிக்கு வராதது பற்றிய காரணத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த அற்புதமான சமூகத்தில் நான் என்போதும் ஆக்டிவாக இருந்த பெண்ணாக இருந்து வந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாக எனது உணர்ச்சி நலன் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். எனவேதான் என்னால் பொது சமூகத்தில் ஆக்டிவாக இருக்க முடியாமல் போனது. ஆகவேதான் நான் விலகி இருந்தேன்.
நான் எனது 30வது பிறந்த நாளையும், புத்தாண்டையும், சூக்ஷமதாரி என்கிற திரைப்பத்தின் வெற்றியையும்கூட கொண்டாட தவறிவிட்டேன். என் நண்பர்களின் அழைப்புகளுக்கு கூட என்னால் பதில் அளிக்க முடியவில்லை. ஏன் பதிலளிக்காமல் நான் விலகினேன் என்பதை தெளிவுப்படுத்தாமலேயே போய்விட்டேன். இந்த செயலுக்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களிடம் மன்னிப்பை கோரும் அதே நேரம் நான் என் சக ஊழியர்களிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் அவர்கள் அழைப்பை நான் ஏற்காமல் இருந்ததால் அவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கலாம். இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. கேரள திரைப்பட விமர்சகர் விருது, அதாவது சிறந்த நடிகைக்கான விருது நேற்று எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. என் பயணம் மிகவும் கடினமாக இருந்தாலும் நான் அதிலிருந்து மீண்டு வர கடுமையாக முயற்சி செய்து வருகிறேன். முழுமையாக மீண்டு வர இன்னும் சிறிது காலம் கூட எனக்கு தேவைப்படலாம். ஆனால் நிச்சயம் மீண்டும் நான் மீண்டு வருவேன்.
அந்த வகையில் இந்த பதிவை இன்றே எழுத நான் முடிவெடுத்தேன். ஏனனில் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இடைவெளிக்கான காரணம் தெரிய வேண்டும். உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி. விரைவில் உங்களை அனைவரையும் சந்திப்பேன். லவ்யூ ஆல்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கடிதத்தில் எல்லாம் ஓகேதான். ஆனால், 'உணர்ச்சி நலன்' மற்றும் 'தனிப்பட்ட சவால்கள்' என்பது மட்டும் எங்கேயோ இடிக்கிறதே? என்று அவரது ரசிகர்கள் சந்தேகம் எழுப்பினர். அதாவது, சமீப காலமாக சினிமா பிரபலங்கள் இடையே விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இப்படி இருக்கும்போது, நஸ்ரியாவுக்கும், ஃபகத் ஃபாசிலுக்கும் இடையே சலசலப்புகள் ஏற்பட்டு பிரச்சனை ஆகியிருக்கிறதோ? என்கிற ரீதியில் இந்த சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பியிருந்தனர். ஆனால், அப்படி எதுவும் கிடையாது என சினிமா வட்டராங்கள் உறுதி செய்திருக்கின்றன.
எது எப்படியோ, நஸ்ரியா மீண்டும் திரும்பி வந்தால் அதுவே கொண்டாடப்பட வேண்டிய விஷயம்தான் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications