பணியாத தமிழ்நாடு, மேற்கு வங்கம்! புதிய கல்வி கொள்கையை ஏற்ற கேரளா.. திடீர் யூடர்ன் ஏன்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் ‛பிஎம் ஸ்ரீ' திட்டத்தின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடும், கேரளா, மேற்கு வங்கம் ஏற்காமல் இருந்தது. இந்நிலையில் தான் திடீரென்று கேரளா யூடர்ன் அடித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வகையில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலமாக ஸ்டாலின் ஆளும் தமிழகம் மற்றும் மம்தா ஆளும் மேற்கு வங்கம் மட்டுமே உள்ள நிலையில் கேரளா திடீர் யூடர்ன் அடித்ததன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் புதிய கல்வி கொள்கை (தேசிய கல்வி கொள்கை)கடந்த 2020ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2022ம் ஆண்டில் நடைமுறைக்கு கெண்டு வரப்பட்டது. இந்த கல்வி கொள்கையின்படி நாடு முழுவதும் 14,500 மாதிரி பள்ளிகளை அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் 5 ஆண்டுகளில் மத்திய அருசின் ரூ.18,128 கோடி உள்பட ரூ.27,360 கோடி பட்ஜெட்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்படும். அதனை வைத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரத்தை மாநிலங்கள் உயர்த்த முடியும். இந்த கல்வி கொள்கையை நம் நாட்டில் உள்ள 33 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்கள் ஏற்கவில்லை.
தமிழக அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை பின்பற்றும் நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. இதனால் தமிழக அரசு ஏற்கவில்லை. அதேபோல் கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகளும் தங்களின் கொள்கைக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பின்பற்றும் வகையில் உள்ளதாகவும் கூறி புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை.
இதனால் இந்த 3 மாநிலங்களுக்கும் புதிய கல்வி கொள்கையின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையை ஏற்றால் உடனடியாக நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் கேரளா அரசு திடீரென்று யூடர்ன் போட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்துள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதற்கு கையெழுத்திட்டுள்ளார். இதனை ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
அதேவேளையில் கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தங்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛"மாணவர்களுக்கு சேரவேண்டிய ஆயிரக்கணக்கான மத்திய நிதியை தடுத்துவைத்துக்கொண்டு கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டோம் பொதுக்கல்வியை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு ரூபாயைக் கூட இழக்கவும் அரசு தயாராக இல்லை'' என்று கூறியுள்ளார்.
கேரளா இந்த புதிய கல்வி கொள்கையில் இணையாமல் இருந்ததால் தற்போது வரை ரூ.1158.13 கோடியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. அதாவது 2025-26ம் ஆண்டுக்கான சமக்கிர சிக் ஷ திட்டத்தின் கீழ் ரூ.456 கோடி, அதற்கு முன்பு 2024-25ம் ஆண்டுக்கான ரூ.513.54 கோடி, 2023-24ம் ஆண்டுக்கான ரூ.188.6 கோடி என்று மொத்தம் ரூ.1,158.13 கோடி நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது புதிய கல்வி கொள்கைக்கான திட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கையழுத்திட்டதன் மூலம் மத்திய அரசு சார்பில் 2027 ம் ஆண்டு வரை கேரளாவுக்கு போக வேண்டிய ரூ.1476.13 கோடி வரை கிடைக்க உள்ளது. பெண்டிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.1,158.13 கோடி உடன் கூடுதல் பணத்தை சேர்த்து மொத்தம் ரூ.1,476.13 கோடி வரை கிடைக்கும். அதுமட்டுமின்றி சமக்கிர சிக் ஷ திட்டத்தின் கீழ் ரூ.971 கோடி கிடைக்கும். இதுதான் கேரளாவை புதிய கல்வி கொள்கையில் இணைய வைத்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications