புதுத்தாலி வாசம்கூட போகல.. கல்யாணம் ஆன 15 நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்.. பரபரப்பு
திருமணம் முடிந்த 15 நாளில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்
திருவனந்தபுரம்: கல்யாணம் ஆகி 15 நாளில், காதலனுடன் ஓடிவிட்டார் இளம்பெண்.. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை கூட்டி வருகிறது.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. 15 நாளைக்கு முன்புதான் இரு குடும்பத்தார் மற்றும் சுற்றம் சூழ திருமணம் நடந்தது.
ஆனால், திடீரென மாமியார் வீட்டில் இருந்த, கல்யாண பெண்ணை காணவில்லை.. அதுமட்டுமல்ல, வீட்டில் இருந்த 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றிருக்கிறார்.. அதோடு சரி, வீட்டுக்கு திரும்பி வரக்காணோம்.

கல்யாண பெண்
எங்கெங்கோ தேடியும் கிடைக்கவில்லை.. அவருடைய செல்போனுக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் கிடைக்கவில்லை.. இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது.. அவர்களும் பதறிக் கொண்டு வந்தனர்.. மகளை காணவில்லை என்று போலீசில் புகார் தந்தனர்,. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்..

ஓட்டம்
அப்போதுதான் அந்த பெண் எஸ்பிஐ வங்கியில் கலெக்ஷன் ஆபீசராக வேலை பார்த்து வருபவர் என்பதும், அந்தப்பெண் காதலனுடன் ஓடிப்போனதும் தெரியவந்தது...இதனையடுத்து இந்த ஜோடியை போலீசார் தேட துவங்கினர். இறுதியில் ஒருவழியாக கண்டுபிடித்து காதலனையும், அந்த பெண்ணையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. ஆனால், கணவருடன் வாழ தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார்..

காதல்
அத்துடன் தன்னுடைய குடும்பத்தினருடன் செல்லவும் விருப்பமில்லை, காதலனுடனேயே வாழ விரும்புவதாக கூறினார்.. இதை கேட்டு பெண்ணின் பெற்றோர் பதறிவிட்டனர்.. இவர்கள் இருவரும் காதலித்து வந்த விவரம் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்கனவே தெரியுமாம்.. முறைப்படி வந்து பெண் கேட்டும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளின் திருமணத்துக்கும் மறுத்துள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை செய்ததாக இளம்பெண் கூறுகிறார்..

பரபரப்பு
ஆனால் பெண்ணின் பெற்றோரோ, சொத்து கையில் வருவதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்து, இப்போது 2 பேரும் ஓடிப்போயுள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இறுதியில், தன்னுடைய நகைகளை கழட்டி குடும்பத்தினரிடம் தந்துவிட்டு, காதலனுடனேயே அந்த பெண் சென்றுவிட்டார். இந்த சம்பவம்தான் கேரளாவில் பரபரப்பை கூட்டி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications