ஒரே பரபரப்பு.. மாவோயிஸ்ட் கைது விவகாரம்.. கோவை உட்பட 5 மாவட்டங்களில் 23 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை
என்ஐஏ அதிகாரிகள் 5 மாவட்டங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்
திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி, ராமநாதபுரம், மதுரை, கோயம்புத்தூர் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த 5ம் தேதி கேரள மாநிலம் விழிஞ்ஞம் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சற்குணம்(எ) சபேசன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவை சேர்ந்தவர் கைது செய்தனர்.

சற்குணம் கைதுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்புடைய 5 மாவட்டங்களில் 23 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதிகாலையிலேயே திடீர் சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டது பெரும் பரபரப்பை கூட்டி வருகிறது.. சிவகங்கை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் உள்ள மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் சிங்காரம் வீடு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சற்குணம் வீடு, ஆதரவாளர்களான கோவை புலியகுளம் மருத்துவர் தினேஷ் மற்றும் டேனிஷ் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, பொள்ளாச்சி அடுத்த அங்கலங்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ், பெரியகுளத்தில் வேல்முருகன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். கேரள சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் காளிதாஸ் என்பவரின் சகோதரர் தான் சிங்காரம்.. இவரது வீடு சிவகங்கை அண்ணா நகரில் உள்ளது... அங்கும் அதிகாரிகளின் சோதனை நடக்கிறது..
தேனி, பெரியகுளம் எண்டபுளி அண்ணாநகரில் வசிக்கும் வேல்முருகன் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. இதில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சற்குணம் (எ) சபேசன் வீட்டில் 2வது முறையாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சந்தோஷ் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கோவை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications