பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு.. எலும்பும், கறியும் போட்டு வளர்த்தேனே.. ஓனர் உருக்கம்!
திருவனந்தபுரம்: பக்கத்துவீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அதன் உரிமையாளர் அந்த நாயை விட்டு விடுவதாக ஒரு கடிதத்துடன் அதை துரத்திவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் விலங்கு உரிமை ஆணையத்தின் உறுப்பினராக உள்ள ஸ்ரீதேவி தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் சாக்கா மார்க்கெட் முன்பு கழுத்தில் ஒரு கடிதத்துடன் இருந்த நாய் குட்டியை விலங்குகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் மீட்டெடுத்தார்.
அந்த கடிதத்தை அந்த நாயின் உரிமையாளர் எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது "இது மிகவும் நல்ல நாயாகும். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. அதிக உணவை உண்ணாது. இந்த நாய்க்கு நோய்கள் கிடையாது.

கண்டுபிடித்தேன்
5 நாட்களுக்கு ஒரு முறை குளிக்கும். இது குரைக்க மட்டுமே செய்யும். 3 ஆண்டுகளாக யாரையும் கடித்ததில்லை. பால், பிஸ்கெட், பச்சை முட்டை ஆகியவற்றை மட்டுமே உட்கொள்ளும். இத்தகைய நாய் எங்கள் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை கண்டுபிடித்தோம்.

வேதனை
இதனால் இனி இந்த நாய் எங்களுக்கு தேவையில்லை. அதனால் இதை துரத்திவிடுகிறோம் என அந்த கடிதத்தில் எழுதியிருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ குழந்தை போல் கடிதம் எழுதியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

தொடர்பு
நாம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறோமே அது போல்தான் நாய்களுக்கிடையேயான உறவு என்பதை போல் கருத வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் ஸ்ரீதேவி தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாய் தனது உரிமையாளரை தேடுவதாகவும் இதை பெற விரும்பினால் தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஒரு எண்ணையும் ஸ்ரீதேவி கொடுத்துள்ளார்.
புகார்
கள்ளக்காதலால் மனித குலத்துக்குத்தான் பிரச்சினை என்கிற போதிலும் இந்த உறவு நாயையும் விட்டு வைக்கவில்லை. மனிதன் எப்படி தன் வம்சத்தை விருத்தி செய்கிறானோ அது போல் நாய்களும் விருத்தி செய்கிறது என்பதை கூட புரியாமல் சின்னஞ்சிறிய நாயை தவிக்க விட்ட இந்த உரிமையாளருக்கு எதிராக ஸ்ரீதேவி புகார் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications