62 பேரிடம் ரூ7.78 கோடி நிதி நிறுவன மோசடி- பத்மஶ்ரீ விருது பெற்ற கேரளா சுந்தர் சி மேனன் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 62 பேரிடம் ரூ7.78 கோடி மோசடி செய்ததாக 2016-ல் பத்மஶ்ரீ விருது பெற்ற தொழிலதிபர் சுந்தர் சி.மேனன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தக் கூடிய திருவம்பாடி தேவசம்போர்டு தலைவராகவும் இருந்த சுந்தர் சி மேனன் தற்போது நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் சுந்தர் சி மேனன். இவர் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தார். இவரது நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி பிளஸ் அசல் தரப்படும் எனவும் விளம்பரங்கள் செய்தார். இவரை நம்பி ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர்.

ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அதிக வட்டியுடன் அசலை திருப்பித்தராமல் சுந்தர் சி மேனன் ஏமாற்றி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்த பொதுமக்கள் திருச்சூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
மொத்தம் 62 பேர் திருச்சூர் போலீசில் சுந்தர் சி மேனனுக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். ரூ7.78 கோடி பொதுமக்கள் பணத்தை சுந்தர் சி மேனன் மோசடி செய்ததாக திருச்சூர் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைகளின் முடிவில் திருச்சூர் போலீசார் சுந்தர் சி மேனனை நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தக் கூடிய திருவம்பாடி தேவசம்போர்டு தலைவராக இருந்தவர் சுந்தர் சி மேனன். 2016-ம் ஆண்டு தொழிலதிபர் என்ற முறையில் சுந்தர் சி மேனனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications