காதலியுடன் உல்லாசமாக இருக்க.. மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 1.20 கோடி திருடிய கேரள மதபோதகர்!
திருவனந்தபுரம்: அமெரிக்காவில் பணியாற்றும் மனைவியின் ஊதியத்திலிருந்து ரூ 1.20 கோடியை எடுத்து காதலியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி ஜாலியாக இருந்த கேரளா மத போதகரை போலீஸார் கைது செய்தனர்.
கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜு கே ஜோஸ் (52). மத போதகர். இவரது மனைவி அமெரிக்காவில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்க வங்கியில் இருவர் பெயரிலும் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கில் மனைவி தனது சம்பள பணத்தை டெபாசிட் செய்வது வழக்கம்.

ரூ 1.20 கோடி
அவ்வாறு டெபாசிட் செய்த பணத்திலிருந்து ரூ 1.20 கோடி மாயமானதை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து ஆலப்புழா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மனைவியின் கணக்கு
போலீஸார் ஜோஸின் மனைவியின் கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது ரூ 1.20 கோடி ரூபாய் பிரியங்கா என்ற 30 வயது பெண்ணின் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜோஸிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்களை அவர் அளித்தார்.

வெளிநாடு
மனைவி வெளிநாடு சென்ற பின்னர் ஜோஸும் பிரியங்காவும் நெருக்கமாகினர். இதனால் அவருடன் ஜாலியாக இருக்க அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரூ 1.20 கோடி பணத்தை பிரியங்காவுக்கு ஜோஸ் கொடுக்க நேரிட்டதால் கொடுத்தது உறுதியானது.

தப்பியோட்டம்
இதையடுத்து ஜோஸை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. பிரியங்காவை கைது செய்ய சென்ற போதும் அவர் இல்லை. இதனால் இருவரையும் தேட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

நேபாளத்தில் பதுங்கல்
இதையடுத்து அவர்கள் இருவரும் நேபாளத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு ஆலப்புழா போலீஸார் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மத போதகர் தன் மனைவியின் சம்பளத்தில் இருந்து ரூ 1.20 கோடி ரூபாயை காதலிக்கு தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications