கேரளாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாத கார் டிரைவர்.. மாரடைப்பு நோயாளி அரைமணி நேர தாமதத்தால் மரணம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கண்ணூர் அருகே மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியை உறவினர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். தலச்சேரி மருத்துவமனைக்கு நோயாளி கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் முன்னால் ஒரு கார் சென்று கொண்டே இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரால் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல சுமார் அரை மணிநேர காலதாமதம் ஏற்பட்டதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே மட்டனூரில் மட்டனூரைச் சேர்ந்த ருகியா (61) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆம்புலன்ஸ் வேகமாக வந்த ருகியாவை அழைத்து சென்றது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மட்டனூரில் இருந்து தலசேரி மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார். எல்லா வாகனங்களும் வழிவிட்டன. ஆனால் ஒரு கார் ஓட்டுநர் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவே இல்லை.. முன்னால் சென்ற கார் ஓட்டுநருக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் எச்சரிக்கை செய்தார். ஆனால் கார் ஓட்டுநர் இரக்கமே இல்லாமல் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் முன்னோக்கி சென்று கொண்டே இருந்தார். அவர் வேகமாகவும் செல்லவில்லை..

இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி ருகியாவுடன் தலச்சேரி மருத்துவமனைக்கு போக முடியவில்லை.. சுமார் அரைமணி நேரம் தாமதமாகவே தலச்சேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் நோயாளி ருகியாவுடன் சென்றார். அங்கு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் நோயாளி இறந்துவிட்டதாக கூறினார்கள். சற்று வேகமாக அழைத்து வந்திருந்தால் மாரடைப்பால் தவித்த ருகியா பிழைத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் ஓட்டுநரை ஜாமீனில் வெளிவர முடியாத படி சிறையில் அடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Car blocks ambulance in Kannur, Kerala; patient loses life tragically#kannur #tragic #kerala #AmbulanceChaser pic.twitter.com/mLfGR7U0Ed
— Oneindia News (@Oneindia) January 17, 2025
முன்னதாக இதே கேரளாவில் தான் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் காரை ஓட்டியவருக்கு வீடு தேடி சென்று 2 லட்சம் ரூபாய் போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் கார் ஓட்டுநரின் லைசென்ஸையும் ரத்து செய்தனர். அப்படி செய்தும் கேரளாவில் சில ஓட்டுநர்கள் இப்படி மனிதநேயமற்ற வகையில் நடந்து கொண்டிருப்பது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்புலன்சுக்கு கார் வழிவிடாமல் முன்னோக்கி கார் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications