Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சைக்கோ" புருஷன்.. உடம்பெல்லாம் கீறி தாக்கி.. அலறிய பரிதாப பெண்.. இதுல வீடியோ வேற.. ஷாக்கில் மக்கள்

மனைவியை தாக்கிய சைக்கோ கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நெஞ்சம் பதைபதைத்து போகும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது.. என்ன நடக்கிறது கேரளாவில்..?

கடவுளின் தேசம் என்று புகழப்பட்டு வரும் கேரளாவில் சமீபகாலமாகவே குற்றங்கள் பெருகி வருகின்றன.. பெண்கள் அதிக அளவு கல்வி கற்ற மாநிலமும்கூட.

ஆனால், இளம்பெண்கள் அதிலும் படித்த பெண்கள் வரதட்சணையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள்.. இன்னொரு பக்கம், நரபலி என்ற பெயரில் மூடபழக்கத்திற்கு ஆளாகி கிடக்கிறார்கள்..

 குக்கர் + எலும்பு

குக்கர் + எலும்பு

மனிதர்களை கொன்று, உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் போட்டு வேகவைத்து, குழம்பு வைத்து சாப்பிடும் அளவுக்கு, அங்குள்ள சிலர் நம்மை உறைய வைத்துள்ளனர்.. இந்த கொடூரத்தில், பெண்களே ஈடுபட்டுள்ளது அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறது.. பொதுவாக கேரளா என்றாலே, வருடா வருடம், வைரஸ் நோய்கள் மற்றும் இயற்கை சீற்றத்துக்கு ஆளாவது வழக்கமான ஒன்று.. காரணம், அதன் பூலோக அமைப்பு அந்த மாதிரியானது.. இதனால், இயற்கை சீற்றத்துக்கு ஏராளமானோர் உயிரிழந்து விடுகின்றனர்.

சைக்கோ

சைக்கோ

இதற்கு நடுவில் குற்றங்களும் பெருகி, அதன்மூலமும் அப்பாவி மனிதர்கள் உயிரிழப்பது ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் பெண்கள் மீதான கொடுமைகள், வடமாநிலங்களை போலவே நம் தென்மாநிலங்களிலும் நடந்து வருவது வருத்தமளிக்கிறது.. இதோ இன்னொரு ஒரு கொடூர சம்பவம் கேரளாவில் நடந்து, வெலவெலக்க செய்து வருகிறது.. திருவனந்தபுரம் மாவட்டம் மலையன்கீவு பகுதியில் வசிக்கிறார் அந்த சைக்கோ கணவன்.. பெயர் திலீப்.. 27 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஆதிரா.. 24 வயதாகிறது..

 சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட்

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆனால் திலீப் மது போதைக்கு அடிமையானவர்.. எந்நேரமும் போதையிலேயே மிதந்து கொண்டிருப்பாராம்.. இதனால், குடும்பத்தை சரிவர கவனிப்பதே கிடையாதாம்.. கடைசியில் குடும்பத்தில் கடனும் வறுமையும் அதிகமாகிவிட்டது.. குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியாத நிலைமையும் வந்துவிட்டதால், வேறுவழியின்றி ஆதிரா வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.. அருகில் இருக்கும் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.. ஆனால் ஆதிரா வேலைக்கு செல்வது திலீப்பிற்கு பிடிக்கவில்லை..

கீறல்கள்

கீறல்கள்

சந்தேகம் மண்டைக்கு ஏறிவிடவும், இது தொடர்பாக ஆதிராவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.. அப்படித்தான், கடந்த 17ம் தேதி பயங்கரமாக குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார்.. வழக்கம்போல், ஆதிராவை இழுத்து போட்டு கடுமையாக தாக்கி உள்ளார்.. போதையில் கண்மூடித்தனமாக அடித்ததில், ஆதிராவின் உடம்பு, முகமெல்லாம் ரத்தம் கொட்டியது.. ஏற்கனவே ஆதிராவின் முகத்தில் கீறல்களும், காயங்களும் நிறைய இருந்தன.. அந்த ரத்த காயங்கள் இருந்த நிலையில், இந்த ரத்தமும் அதில் சேர்ந்து வழிந்தது..

 உடம்பெல்லாம் கீறல்

உடம்பெல்லாம் கீறல்

வலி தாங்காமல் அலறி துடித்து ஆதிரா அழுதார்.. உடனே அதை பார்த்து ரசித்த திலீப், வீடியோ எடுத்தார்.. ரத்தம் வழிய மனைவியை பக்கத்தில் நிற்கவைத்து கொண்டு அந்த வீடியோவில் அவரே பேசுகிறார்.. "இங்க பாருங்க.. நான் போதையில்தான் இருக்கேன்.. ஆனாலும் தெளிவாக இருக்கேன்.. நியாயமான காரியத்தை தான் செய்கிறேன்.. இதோ இந்த ரத்தம் வழியுதே அது என்னால்தான்.. நான்தான் இவளை தாக்கினேன்.. முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு போகமாட்டாள்" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் ஆதிராவை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

 தழுதழுத்த ஆதிரா

தழுதழுத்த ஆதிரா

உடனே ஆதிரா அழுதபடியே, "இவர் வேலைக்கு போவதில்லை.. வேலைக்கு சென்று சம்பாதித்து கடனை அடைத்தால், நான் வேலையை விட்டுவிட்டு குழந்தைகளை பார்த்துப்பேன்.. ஆனால், நான் வேலைக்கு போகவில்லையானால், குழந்தைகள் பட்டினி தான் கிடப்பார்கள்" என்று தழுதழுக்க பேசுகிறார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. இதனை பார்த்த பலரும், இந்த சைக்கோவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கருத்துக்களை பதிவிட துவங்கினர்.. ஆனாலும் போலீஸார் இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்று கூறப்படுகிறது..

சைக்கோ

சைக்கோ

அதற்கு பிறகுதான், திலீப்பின் மனைவி துணிந்து வந்து, போலீஸில் நேரடியாகவே புகார் கொடுத்தார். அதில் குடிபோதையில் தனது கணவர் தினமும் அடித்து சித்ரவதை செய்வதாகவும், குடும்பச் செலவுக்குப் பணம் தராமல் துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்தனர். இதில் இன்னொரு கொடுமையும் உள்ளது.. ஆதிராவை துரத்தி துரத்தி காதலித்தாராம் இந்த சைக்கோ.. 2 பேர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு வந்துள்ளதால், வீட்டை விட்டு வெளியேறிதான் திருமணம் செய்தார்களாம்.. இந்த "மதுபோதை" மனிதர்களை இன்னும் எப்படியெல்லாம் ஆட்டிவைக்க போகிறதோ??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+