கோழிக்கோடு விமான விபத்து.. பலியான விமானி சாத்தே முன்னாள் விமானப்படை விங் கமாண்டர்!
திருவனந்தபுரம்: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகியதில் விமானி உயிரிழந்தார். அவர் மிகவும் கைதேர்ந்த விமானியாவார்.
கொரோனா பரவலால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாட்டுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் துபாய், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இருந்த இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலமாக தாயகம் கொண்டு வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எதிர்பாராத விபத்து
அந்த வகையில் துபாயில் 184 பயணிகள் உள்பட விமான பணியாளர்கள் என மொத்தம் 191 பேரை அழைத்து கொண்டு கோழிக்கோடு நகருக்கு இந்த விமானம் தரையிறங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவே வெள்ளகாடாக காட்சியளிக்கும் நிலையில் கனமழையால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் எதிர்பாராதவிதமாக சறுக்கிக் கொண்டு 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.

காக்பிட்
இதனால் விமானமே இரண்டாக பிளந்தது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெயர் தீபக் வசந்த் சாத்தே. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடன் இருந்த மற்றொரு விமானி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவரும் இறந்துவிட்டார். விமானிகள் இருந்த காக்பிட் அறையும் , விமானத்தின் முன்கதவும் கடுமையாக சேதமடைந்தது.

யார் இந்த தீபக்
தீபக் மிகவும் கைதேர்ந்த விமானி என கூறப்படுகிறது. இவர் விமான படையின் முன்னாள் விங் கமாண்டராக இருந்தார்.கேப்டன் தீபக் சாத்தே விமான படையின் முன்னாள் விமானியாவார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இயக்குவதற்கு முன்னர் சாத்தே ஏர் இந்தியாவின் ஏர் பஸ் 310-ஐயும் இயக்கிய அனுபவம் உடையவர்.

விருது
அதன் பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 737 விமானத்தை இயக்கி வந்தார். இவர் விமான படை அகாதெமியின் விருதை பெற்றுள்ளார். போர் விமானங்களை இயக்குவதிலும் நிறைந்த அனுபவம் மிக்கவர். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெஸ்ட் பைலட்டாகவும் இருந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications