கேரளாவில் ‘Self Lockdown'.. காலை 11 மணி டூ மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் - பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: கேரளாவில் வெயில் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுன் என்று நினைத்து தாமாகவே முன்வந்து 'சுயஊரடங்கை' கடைப்பிடிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் தற்போது வெயில் உச்சம் தொட்டுள்ளது. பல மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகும்போது வெப்ப அலை வீசும்.
தற்போது பாலக்காடு, கொல்லம், திருச்சூர் போன்ற மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பினராயி விஜயன் கேரளா மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அதன்படி கேரளா மக்கள் சுயஊரடங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பினராயி விஜய் கூறுகையில், ''கேரளாவில் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் காலை 1 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் சுயஊரடங்களை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பரவல் காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு என்று நினைத்து பொதுமக்கள் இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்படலாம். இதனால் தேவையில்லாத பயணங்கள், வெளிப்புற வேலைகளை வெயில் நேரத்தில் தவிர்க்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். வெயிலில் யாரும் சிரமப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒருங்கிணைந்து மக்கள் அனைவரும் செயல்பட்டால் நாம் வெயில் காலத்தை எளிதாக கடக்கலாம்.'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக கேரளாவில் அரசு, பொதுக் கூட்டங்கள், வெளிப்புற விளையாட்டு, பேரணி, பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகளுக்கு நண்பகல் நேரத்தில் தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் தீ விபத்துகள் பற்றியும், தீ விபத்துகள் ஏற்பட்டால் அதனை எப்படி சமாளிப்பது, தப்பிப்பது பற்றியும் அதிகாாரிகள் மாநில மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
அதிகரித்துள்ள வெயிலால் தொழிலாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோருக்கு குடிநீர் வழங்குவது, நிழலுடன் கூடிய ஓய்வு பகுதிகளை அமைக்க உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. நிவாரண வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications