பிரதமர் நரேந்திர மோடியின் கேரள விசிட் .. 'ஆபரேஷன் சவுத்' திட்டத்துக்கு டீசர்?.. பின்னணி என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு இன்று வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல ஆயிரம் மதிப்பிலான முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
தென் மாநிலங்களை குறிவைக்கும் பாஜகவின் 'ஆபரேஷன் சவுத்' திட்டத்துக்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட பெரும்பாலான வட மாநிலங்களில் கோலோச்சி விட்ட பாஜகவால் தென் மாநிலங்களில் பெரிய அளவில் கால் பதிக்க முடியவில்லை. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் போதிய பலம் இல்லாத கட்சியாகவே பாஜக இருந்து வருகிறது.

எனவே தென் மாநிலங்களை குறிவைத்து பாஜக சமீபகாலமாக காய்களை நகர்த்தி வருகிறது. 'ஆபரேஷன் சவுத்' என்ற பெயரில் இதற்கான திட்டத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி மேற்பார்வையில் இந்த திட்டம் செயல்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பது; அந்தந்த மாநிலங்களின் முன்னணி நடிகர்களை பாஜகவில் சேர்ப்பது என்பன போன்ற உத்திகள் ஆபரேஷன் சவுத்தில் கையாளப்படும் எனத் தெரிகிறது. இதன் ஒருபகுதியாகவே, தெலங்கானா மற்றும் ஆந்திராவுக்கு அமித் ஷா அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தெலங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆரை அவர் சந்தித்து பேசினார். ஜூனியர் என்டிஆரை முன்னிலைப்படுத்தி தெலங்கானாவில் பாஜகவை வலிமைப்படுத்த அமித் ஷா திட்டமிட்டிருப்பதாக அப்போது தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, முதலில் கேரளாவுக்கு இன்று மாலை பிரதமர் மோடி வருகை தருகிறார். கொச்சி விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, 6 மணிக்கு ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான கல்லடி கிராமத்துக்கு சென்று ஆதி சங்கர ஜென்மபூமியை பார்வையிடுகிறார்.
அதன் பிறகு, நாளை காலை 9.30 மணிக்கு கொச்சி கடற்படைத் தளத்துக்கு செல்லும் மோடி, அங்கு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரூ,1,950 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கொச்சி மெட்ரோ ரயில்வேயின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதையடுத்து, குருப்பந்தரா - கோட்டயம் - சிங்கவனம் ரயில்வே வழித்தடத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகர் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
கேரளாவில் இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு செல்கிறார். அங்கு மங்களூர் துறைமுகத்தில் சரக்கு மற்றும் கண்டெய்னர்களை கையாளும் தளத்துக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இவ்வாறு ரூ.3,800 கோடி மதிப்பிலான திட்டங்களை மங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications