திடீர் திருப்பம்! கேரளா ஓடும் ரயிலில் தீ வைப்பு சம்பவம்.. உபியை சேர்ந்த ஒருவர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Recommended Video
கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு ஆலப்புழா- கண்ணூர் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல ரயில் புறப்பட்டது. ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தைக் கடந்த போது அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது..

ரயில் ஓடிக் கொண்டே இருந்த போது, அங்கே இருந்த ஒருவர், சக பயணி மீது தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றார். இதில் மொத்தம் 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தண்டவாளத்தில் 3 உடல்கள், தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு குழந்தை உட்பட மூவரின் உடல் தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டன.
ரயிலில் பயணம் செய்த அந்த மர்ம நபர், எதிரே அமர்ந்திருந்தவர் மீது ஸ்பிரே மூலம் பெட்ரோல் தெளித்துள்ளார். அவர்கள் மீது தீ வைத்து விட்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்ததாகத் தெரிகிறது.
மேலும், பின்னாலேயே வந்த டூ வீலரில் அவர் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. ஓடும் ரயிலில் தீ வைக்கப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கக் கேரள அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இதனிடையே கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் நொய்டாவை சேர்ந்த அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவர் போலியான பெயரில் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கண்ணூரில் கட்டிட வேலை செய்து வரும் உபியை சேர்ந்த ஷாருக் சைஃபி என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications