கேரளாவில் பாஜக எம்எல்ஏக்கள் பூஜ்ஜியம்! ஆனாலும் திரௌபதி முர்முவுக்கு கிடைத்த ஒற்றை வாக்கு! அது எப்படி
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைமை உத்தரவை மீறி திரௌபதி முர்முவுக்கு வாக்கு அளித்து உள்ளனர்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர். இருவரும் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டினர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரௌபதி முர்முவுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றார். மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளைத் திரௌபதி முர்மு நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராகும் வாய்ப்பை பெற்றார். இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.

திரௌபதி முர்மு
மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. அவர் பெற்ற பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். இதனிடையே பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சித் தலைமை உத்தரவைத் தாண்டி திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர். மொத்தம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 எம்பிகக்கள் மற்றும் 104 எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளனர். திரௌபதி முர்முவின் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் சரிபாதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவருக்கு வாக்களித்து உள்ளனர்.

கேரளா
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதற்கும் ஒரு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கூட இல்லை. இருந்த போதிலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் கேரளாவில் இருந்து பாஜக வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஒரு வாக்கு கிடைத்துள்ளது. இது அம்மாநில பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் அங்கு யார் திரௌபதி முர்முவுக்கு வாக்கு அளித்து இருப்பார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.

ஒற்றை வாக்கு
கேரளா சட்டசபையில் இடதுசாரிகள் கூட்டணிக்கு 99 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 41 இடங்களும் உள்ளன. அங்குள்ள மொத்தம் 140 எம்எல்ஏக்கள் வாக்குகளில், 139 பேரின் வாக்குகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் சின்ஹாவுக்கு கிடைத்துள்ளது. அதேநேரம் ஒரே ஒரு வாக்கு மட்டும் திரௌபதி முர்முவுக்கு கிடைத்து உள்ளது. இது தொடர்பாக ஆளும் சிபிஎம் தரப்பும் சரி, காங்கிரஸ் தரப்பும் சரி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ரொம்ப சந்தோஷம்
பாஜகவின் எம்எல்ஏக்கள் இல்லாத சூழலிலும் ஒரு வாக்கு கிடைத்துள்ளது அம்மாநில பாஜக தலைமைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக இரு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் இருப்பினும் ஒரு வாக்கு கிடைத்தது மகிழ்ச்சியைத் தருவதாகவும் கேரளா பாஜக தரப்பில் தெரிவித்து உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே கேரளா பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் கேரளாவில் இருந்து ஒரு வாக்கு தங்களுக்குக் கிடைத்து உள்ளதாகத் தெரிவித்தார்.

விலைமதிப்பானது
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கே.சுரேந்திரன், "அந்த 139 வாக்குகளைவிட இந்த ஒற்றை வாக்கிற்கு மதிப்பு அதிகம். அத்தனை நெகடிவ் வாக்குகளுக்குப் பதிலடி கொடுப்பதாக இந்த ஒரு வாக்கு அமைந்துள்ளது. பலரும் நினைப்பதைப் போல இது தெரியாமல் விழுந்த வாக்கு இல்லை. திரௌபதி முர்முவுக்கு வாக்களிக்கும்படி நான் மாநிலத்தில் இருக்கும் 140 எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் எழுதினேன். மேலும், பலரையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

யார் அந்த நபர்
இருப்பினும், கட்சிக் கொள்கையை மீறி, பாஜக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது என்று அவர்களில் பலரும் தெரிவித்தனர். மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி கூறிவிட்டு வந்தேன் மொத்தம் இரண்டு வாக்குகள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் ஒரு வாக்கு கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை. கட்சித் தலைமையின் அழுத்தம் காரணமாக அப்படி நடந்ததா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்றார். அதேநேரம் யார் கட்சி மாறி வாக்களித்தார் என்ற தகவலை அவர் கூறவில்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications