வயநாட்டில் ராகுல் காந்தி! கேரளாவில் ‛இந்தியா’ கூட்டணியுடனே மோதும் காங்கிரஸ்! கோபமான இடதுசாரிகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் உள்பட 15 காங்கிரஸ் வேட்பாளர்கள் கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தொகுதிகளிலும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இடையே போட்டி நிலவ உள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது தேசிய அளவில் ‛இந்தியா' கூட்டணிக்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. மொத்தம் 39 வேட்பாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக கேரளாவில் மட்டும் 15 நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Rahul again from Wayanad How 2 candidates from India alliance contest from this constituency Confusion starts

இந்த பட்டியலில் ராகுல் காந்தி, சசிதரூர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சசிதரூர் தற்போது திருவனந்தபுரம் தொகுதி எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் அவருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் மீண்டும் கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்.

கேரளாவை பொறுத்தமட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கு கட்டமைப்பு உள்ளது. இந்த கட்சிகளுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

மேலும் வயநாடு தொகுதி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜாவின் மனைவிதான் ஆனி ராஜா. இவர் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ராகுல் காந்தி வயநாட்டை கைவிட்டு வேறு தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகின.

ஆனால் இன்று வெளியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ராகுல் காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வயநாட்டில் ‛இந்தியா' கூட்டணியின் 2 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா. இன்னொன்று சிட்டிங் எம்பியான காங்கிரஸின் ராகுல் காந்தி. இதனால் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது 2 பேரில் யாராவது ஒருவர் போட்டியில் இருந்து விலகுவார்களா? இல்லாவிட்டால் வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது. அதாவது கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலமான கட்டமைப்பு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தம் 20 இடங்களில் 19 இடங்களில் வென்றது.

இத்தகைய சூழலில் தான் ‛இந்தியா' கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியபோதே ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடக்கூடாது என இடதுசாரி தலைவர்கள் கூறினர். ஆனால் ராகுல் காந்தி அதனை கேட்காமல் மீண்டும் கேரளாவிலேயே போட்டியிட்டுள்ளார். அதோடு மேலும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்க்க உள்ளனர்.

இதனால் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டுவிட்டு மீண்டும் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி தனித்து களமிறங்க விரும்புவதாகவும், இதனால் தான் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கேரளாவில் ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் உள்ளது. மேலும் கேரளாவில் உள்ள இந்த குழப்பம் என்பது தேசிய அளவில் ‛இந்தியா' கூட்டணிக்கு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ‛நெகட்டிவ் இமேஜை' கொடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காங்கிரஸ் கட்சி தற்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த வேளையில் பிற கட்சிகளை காங்கிரஸ் கட்சி அரவணைத்து செல்ல வேண்டும். இதனால் ராகுல் காந்தி வேறு மாநிலத்தில் போட்டியிட்டு இருக்க வேண்டும். அதோடு கேரளாவில் காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் அப்படி எதுவும் செய்யவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் மீது கோபமடைந்துள்ளன. ஏனென்றால் இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கேரளா தான். அப்படி இருந்தும் காங்கிரஸ் கட்சி விட்டு கொடுக்கவில்லையே என கம்யூனிஸ்ட் கட்சியினர் புலம்ப தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+