நடந்ததால் கொப்பளித்த ராகுல் கால்கள்... இன்று பாதயாத்திரைக்கு ஓய்வு- நாளை முதல் மீண்டும் தொடக்கம்
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரைக்கு இன்று ஓய்வு. ராகுல் காந்தியின் கால்கள் கொப்பளித்துள்ளதால் இன்று ஒருநாள் மட்டும் அவர் ஓய்வெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 3,500 கி.மீ தொலைவுக்கு 150 நாட்கள் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் ராகுலின் யாத்திரையை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 3 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் தற்போது பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி செல்லும் வழியில் பொதுமக்கள், மாணவர்கள், அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் என பலரும் தொடர்ந்து கலந்துரையாடி செல்கிறார். ராகுலின் இந்த பாதயாத்திரைக்கு கேரளாவில் மிகப் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் ராகுலின் கால்களில் கொப்பளங்கள் உருவாகி உள்ளன. இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று ஒருநாள் ராகுல் காந்தி ஓய்வு எடுக்கிறார். இதனால் இன்று பாதயாத்திரை நடைபெறவில்லை. நாளை முதல் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வழக்கம் போல தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications