கேரளா பாஜக தலைவர் அதிரடி மாற்றம்.. சங்பரிவாரை சாராதவரை தேடிப்போன பதவி! யார் இந்த ராஜீவ் சந்திரசேகர்
திருவனந்தபுரம்: கேரளா பாஜக தலைவராக செயல்பட்டு வந்த கே சுரேந்திரன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளார். அவருக்கு பதிலாக சங்பரிவார் அமைப்புடன் தொடர்பு இல்லாத ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார். கேரளா பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ள ராஜீவ் சந்திரசேகர் யார்? அவர் பின்னணி பற்றிய விபரம் வருமாறு:
வடமாநிலங்களை போல் கர்நாடகா தவிர்த்து தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது என்பது பாஜகவுக்கு சாதாரணமான விஷயமாக இல்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக போராடி வருகிறது.
இந்த 4 மாநிலங்களிலும் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வலுவான கூட்டணி அமைத்து களமிறங்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. தற்போது ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

ஒருபக்கம் கூட்டணி அமைத்து தென்மாநிலங்களில் கால்பதிக்க பாஜக முயன்று வந்தாலும் கூட சொந்தமாக கட்சியை வளர்க்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் அண்டை மாநிலமான கேரளாவில் பாஜகவின் தலைவர் கே சுரேந்திரன் மாற்றம் செய்யப்பட உள்ளார். இவர் கடந்த 202ம் ஆண்டில் இருந்து கேரளா மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் மாற்றப்படுகிறார்.
கே சுரேந்திரனுக்கு பதிலாக கேரளா பாஜக மாநில தலைவர் பொறுப்பு ராஜீவ் சந்திரசேகர் நியமனம் செய்யப்படுகிறார். கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று நடந்த கோர் கமிட்டி மீட்டிங்கில் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்றார். இந்த கோர் கமிட்டியில் பாஜகவின் மத்திய பார்வையாளரான பிரகலாத் ஜோஷி மற்றும் கேரளா மேலிட பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் பாஜக மாநில தலைவர் பதவிக்கு ராஜீவ் சந்திரசேகரின் பெயரை அறிவித்தனர்.
இதன்மூலம் கேரளா பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு எதிராளிகள் இன்றி ராஜீவ் சந்திரசேகர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜகவை பொறுத்தவரை பெரும்பாலும் மாநில தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ் உள்பட பிற சங்பரிவார் அமைப்புகளில் இருந்தவர்கள் தான் நியமனம் செய்யப்படுவார்கள். சில இடங்களில் விதிவிலக்கும் வழங்கப்படும். அந்த வகையில் தான் ராஜீவ் சந்திசேகருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஏனென்றால் ராஜீவ் சந்திரசேகர் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பின் பின்புலம் இல்லாதவர்.
அடிப்படையில் தொழிலதிபரான ராஜீவ் சந்திரசேகர் பாஜகவில் சேர்ந்த பிறகு தான் சங்பரிவார் அமைப்புகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அப்படி இருந்தும் ராஜீவ் சந்திரசேகருக்கு இந்த பொறுப்பு தேடிப்போக முக்கிய காரணம் பாஜக மேலிடம் தான். ராஜீவ் சந்திரசேகர் கேரளாவை சேர்ந்தவர். இருப்பினும் அவர் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக 3 முறை தேர்வானவர். ராஜீவ் சந்திரசேகர் முந்தைய பிரதமர் மோடியின் 2.0 அமைச்சரவையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாட்டு துறை, ஜல் சக்தி உள்ளிட்ட துறைகளின் இணை அமைச்சராக செயல்பட்டார். இதனால் அவருக்கு மேலிட செல்வாக்கு உள்ளது.
மேலும் கேரளாவில் மதசார்பற்ற மனநிலையில் உள்ள மக்களின் ஓட்டுகளை பாஜக பெற விரும்புகிறது. அதற்கு ராஜீவ் சந்திரசேகரின் நியமனம் உதவும் என்றும் மேலிடம் நினைத்து கேரளா பாஜகவின் புதிய தலைவராக அவரை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி ராஜீவ் சந்திரசேகர் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நடந்தது. இறுதியில் சசிதரூர் வெற்றி பெற்றார். சசிதரூர் மொத்தம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 155 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த ராஜீவ் சந்திரசேகர் 3 லட்சத்து 42 ஆயிரத்து 78 ஓட்டுகள் பெற்று 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். இது ராஜீவ் சந்திரசேகர் மீதான மேலிடத்தின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் இளைஞர்களை கவர்ந்தார். அவருக்கு ஏராளமான இளைஞர்கள் சப்போர்ட் செய்தனர். பிரசாரம் செய்தனர். இதனை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. 2026ல் கேரளாவில் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை குறிவைத்து தான் ராஜீவ் சந்திரசேகரின் பெயரை கேரளா மாநில பாஜக தலைவர் பதவிக்கு பாஜக மேலிடம் ‛டிக்' அடித்துள்ளது.
ராஜீவ் சந்திரசேகர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தொழிலதிபராக இருந்தார். நம் நாட்டில் 1990 காலக்கட்டத்தில் பிபிஎல் செல்போனை அறிமுகம் செய்தார். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஜூபிட்டர் கேப்பிட்டனர் என்ற முதலீடு மற்றும் நிதி சேவை நிறுவனத்தை தொடங்கினார். அதன்பிறகு ஆசியா நெட் தொலைக்காட்சியை கைப்பற்றினார். மலையாளத்தில் இந்த சேனல் முன்னணியில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications