அட பரிதாபமே.. கேரளாவில் 3 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளவில் தலசேரி, குருவாயூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்ட்டன.

இந்த 3 தொகுதியிலும் வேட்பாளர் இல்லாத நிலைமைக்கு பாஜக கூட்டணி தள்ளப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த நிலையில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. அப்போது தலசேரி, குருவாயூர் மற்றும் தேவிகுளம் தொகுதியில் பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Rejection of BJP candidates in 3 constituencies in Kerala

பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இந்த வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளனர். இதனால் தலசேரி உள்ளிட்ட 3 தொகுதியிலும் வேட்பாளர் இல்லாத நிலைமைக்கு பாஜக கூட்டணி தள்ளப்பட்டு இருக்கிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக மாவட்ட பாஜக தலைவர் ஹரிதாஸ் களமிறக்கப்பட்டார்.

அவரது வேட்பு மனுவில் தேசிய பாஜக தலைவரின் கையெழுத்து இல்லை என்பதற்காக வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இது குறித்து தெரிவித்த ஹரிதாஸ், 'எனது வேட்பு மனுவில் ஒரு சிறிய தவறு மட்டுமே உள்ளது. ஆனால் அதை சரி செய்தும் தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம் என்று ஹரிதாஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+