கேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற முடிந்த சட்டசபைத் தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று முடிந்ததைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகித் தொடங்கியுள்ளன.

இடதுசாரிகள் ஆட்சி பிடிக்கும்
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரிகள் 72-80 இடங்களில் வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகள் 91 இடங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எங்கே
அதேபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 58-64 இடங்களில் வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக கடைசி
பாஜக கடைசி இடம் பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கேரளாவில் குறைந்தபட்சம் இரட்டை இலக்கிலாவது தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டது. இருப்பினும், பாஜக 1-5 இடங்களில் வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்சி
கேரளாவில் கடந்த சில தேர்தல்களாகவே இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறியே ஆட்சி அமைத்து வந்துள்ளன. ஆனால், இந்த முறை இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications