திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

48 மணி நேரம்தான்.. என்ன நடந்தாலும் சபரிமலைக்குள் செல்வேன்.. தனியாக மெர்சல் காட்டும் ரேஷ்மா!

சபரிமலை கோவிலுக்குள் என்ன நடந்தாலும் நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.

Google Oneindia Tamil News

கண்ணூர்:என்ன நடந்தாலும் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.

கேரளாவில் தற்போது இந்து அமைப்புகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்த இவர் பல பெண்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

பேஸ்புக்கில் போஸ்ட்

கண்ணுரின் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்த ரேஷ்மா பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட பேஸ்புக் போஸ்ட் காரணமாக வைரல் ஆனார். சபரிமலை கோவிலுக்குள் வரும் 17ம் தேதி செல்ல போவதாக அறிவித்தார். தன்னுடன் விருப்பம் உள்ள பெண்களும் வரலாம் என்றும் கூறினார். இந்த போஸ்ட் 20 ஆயிரம் லைக்குகளை பெற்றது.

விரதம்

விரதம்

மேலும், இவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே விரதம் இருந்துள்ளார். சரியாக விரதம் இருந்து கோவிலிக்கு செல்ல தயாராகி உள்ளார். மேலும் கருப்பு உடை அணிந்து முறையாக ஆண்கள் இருப்பது போலவே விரதம் இருந்து இருக்கிறார். தீர்ப்பு வந்த அந்த நாளே விரதம் இருக்க தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

கண்டிப்பாக செல்வேன்

கண்டிப்பாக செல்வேன்

இதுகுறித்து அவர், நான் கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவள். ஆண்களை போலவே பெண்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தீர்ப்பின்படிதான் நான் நடக்க போகிறேன். யார் என்னை எதிர்த்தாலும், யார் என்ன செய்தாலும் நான் 17ம் தேதி கோவிலுக்குள் செல்வது உறுதி,. இது நடந்த தீரும், என்று தைரியமாக தெரிவித்து இருக்கிறார்.

பெரிய எதிர்ப்பு

பெரிய எதிர்ப்பு

இந்த நிலையில் அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அவருக்கு கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது. அதே சமயம் இன்னும் நிறைய பெண்கள் என்னுடன் கோவிலுக்குள் வர முன்வர வேண்டும் என்றும் ரேஷ்மா கோரிக்கை வைத்துள்ளார். இந்துத்துவா அமைப்புகளுக்கு பயந்து கொண்டு வராமல் இருக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
Reshma, The one girl who is opposing all the protest Sabarimala Verdict becomes viral after FB post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X