கேரளாவில் எகிறும் கொரோனா.. மீண்டும் வரும் கட்டுப்பாடுகள்? திடீரென வைரஸ் பரவல் அதிகரிப்பது ஏன்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கே புது கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா ஒட்டுமொத்தமாக உலக நாடுகளை உலுக்கிப் போட்டது. அதன் பிறகு உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளால் இப்போது தான் நாம் மெல்ல மீண்டு வருகிறோம்.

இதற்கிடையே இந்தியாவில் வியாழக்கிழமை மட்டும் 237 புதிய கொரோனா கேஸ்கள் உறுதியாகியுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,185 ஆக உள்ளது. இந்தியாவில் நீண்ட காலத்திற்குப் பிறகு கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா: சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் சூழலில், திடீரென நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் JN.1 கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கே கொரோனா அதிகரிக்க இது முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கட்டுப்பாடுகள்: இதனால் நாம் கவலைப்படத் தேவையில்லை என்றாலும் கூட வைரஸ் பரவலைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கேரள அரசு முக்கியமான பகுதிகளிலும் வைரஸ் அதிகரிக்கும் இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் 33 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியான நிலையில், ஒரே மாதத்தில் அங்கே வைரஸ் பாதிப்பு 768ஆக உயர்ந்துள்ளது. இது அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இப்போது ஜே.என்.1 என்ற கொரோனா வேரியண்ட் வேகமாகப் பரவும் நிலையில், காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.
கொரோனா வேரியண்ட்: இந்த புது வகை கொரோனாவால் தீவிர பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆய்வாளர்கள், "இப்போது தான் இந்த புது வேரியண்ட் பரவ ஆரம்பித்துள்ளது. இப்போதே அது தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதேநேரம் கொரோனா மிக வேகமாகப் பரவும் ஆபத்து இருப்பதால் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு தேவை" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா குறித்த கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு இந்த ஜே.என்.1 வேரியண்ட் கேரளாவில் பரவுவதை உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாகவே கேரளாவில் குறுகிய காலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் பல்வேறு ஆய்வாளர்களும் நாம் கவலைப்படத் தேவையில்லை.. ஆனால் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள்.
ஜேஎன் 1 வேரியண்ட்: ஜேஎன் 1 என்பது பைரோலா அல்லது BA.2.86 ஓமிக்ரான் கொரோனாவின் ஒரு துணை வேரியண்ட் ஆகும்.. ஜேஎன் 1 கொரோனா என்பது முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்டது. மேலும், இந்த BA.2.86 ஓமிக்ரான் வேரியண்ட் கடந்த ஜூலை மாதம் டென்மார்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வகை கொரோனா இந்தியாவுக்குத் தான் புதியதோ தவிர உலகிற்கு இல்லை. ஏற்கனவே, இது உலகின் 38 நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. பெரும்பாலும் இது இங்கிலாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தான் அதிகம் இருக்கிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வேரியண்டின் மேல் சுவாசப் பாதையைப் பாதிக்கிறது. அதாவது மூக்கு ஒழுகுதல், இருமல், சளி, சில சமயங்களில் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது வரை ஆக்ஸிஜன், ஐசியூ படுக்கை, வென்டிலேட்டர் தேவைப்படவில்லை. அதேபோல உயிர்ப்புகளும் பெரியளவில் இல்லை" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications