அந்த மலையாள நடிகை யாருன்னே எனக்கு தெரியாது! ஆதாரம் எங்கே? பாலியல் புகாருக்கு ரியாஸ்கான் பதில்
திருவனந்தபுரம்: தன் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் அதை பகிரங்கமாக ரியாஸ் கான் மறுத்துள்ளார். அந்த நடிகையை யாரென்றே தனக்கு தெரியாது என்றும் அவர் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் அட்ஜெஸ்மென்ட், பாலியல் தொல்லை உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து வருகிறது. எல்லா துறைகளிலும் இது போன்றதொரு பிரச்சினை இருக்கும் போதிலும் சினிமா துறையில் பிரபலங்களே பிரபல நடிகைகளுக்கு செய்யும் பிரச்சினை என்பதால் இது பெரிதாக பேசப்படுகிறது.

ரீல் ஹீரோவை பலர் ரியல் ஹீரோவாகவே நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நடிகர்களே , நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் போது அது பெரிதாக பேசப்படுகிறது. சினிமா வாய்ப்புகளுக்காக தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் வாய்ப்புகளே வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தியது. இந்த கமிஷன் அறிக்கை அரசிடம் கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு 4 ஆண்டுகளாகியும் இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
அந்த அறிக்கையில் மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாபியாக்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. நடிகைகளை அரைகுறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள். அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.
உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
மேலும் சம ஊதியம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஹேமா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகை ஒருவர் வெளிப்படையாகவே நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார். அவர் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் கூறியதால் அவர் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தகைய சூழலில் தான் சித்திக் மீது பாலியல் புகார் கூறிய அந்த நடிகை, நடிகர் ரியாஸ் கான் மீதும் புகார் அளித்துள்ளார். அந்த நடிகை கூறுகையில் , போட்டோகிராபர் ஒருவர் மூலம் எனது செல்போன் ரியாஸ் கான் கேட்டு வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வருமாறு அழைத்தார்.
அதற்கு நான் மறுத்தேன். இதனால் என் தோழிகளையாவது அவருக்கு அறிமுகம் செய்து வையுங்கள் என கேட்டு செல்போனில் ஆபாசமாக பேசினார் என அந்த நடிகை குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸ் கான், மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். அவரது வின்னர் காமெடி சீன் நன்றாக இருக்கும்.
மேலும் கமலா காமேஷின் மகள் உமாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்துடன் அவருடைய மகன் ஷாரிக்கிற்கு தற்போதுதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரியாஸ் மீதான பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு ரியாஸ் கானிடம் விளக்கம் கேட்டது.
அதற்கு அவர், "இந்த பாலியல் புகாரை நானே டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். எனக்கே தெரியாத ஒரு விஷயம், எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை நான் டிவியில் பார்த்தேன். அந்த நடிகை யாருன்னே எனக்கு தெரியாது, அவருக்கு நான் போன் செய்ததும் கிடையாது. அதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள்.
ஒரு வேளை நான் வீடியோ கால் செய்திருந்தால் அதை காட்டச் சொல்லுங்கள். யார் வேண்டுமானாலும் நான் ரியாஸ் கான் பேசறேன்னு சொல்லிவிட்டு பேசலாமே! நான் எப்போது பேசினேன், எந்த வருடம், எந்த நாளில் பேசினேன் என்பதையெல்லாம் அவர் சொல்ல வேண்டும். அந்த நடிகையின் முகத்தையே நான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
அந்த நடிகையே தனது புகாரில் என்ன சொன்னார், ஒரு போட்டோகிராபர் போன் கொடுத்ததாகவும் அதில் ரியாஸ் கான் பேசியதாகவும் சொல்கிறார். இதிலிருந்தே அவர் சொல்வது உண்மையில்லை என தெரிகிறது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றமே செய்யாதவர்களையும் இழுத்து விடக் கூடாது இல்லையா?
முதலில் அந்த பெண் அளித்த பேட்டியில் என் பெயரே அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. என் பிரபல வசனத்தை சொல்லி, அந்த படத்தில் நடித்தவர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார் என சொன்னார். அடுத்த இன்டர்வியூவில் என் பெயரை ரியாஸ் கான் என்றார். என் பெயரை சேர்த்து சொல்லி ஜோடித்துள்ளார். என்னை யாரும் விசாரணைக்கு அழைக்கவில்லை. ஒரு வேளை விசாரணைக்கு கூப்பிட்டால் நான் செல்வேன். இவ்வாறு ரியாஸ் கான் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications