உண்மையாவே கடவுளின் தேசம் தான்.. கேரளாவை கண்டு மெய்மறந்த ரஷ்ய சுற்றுலாப் பயணி
திருவனந்தபுரம்: இந்தியா முழுக்க சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட ரஷய் பயணி, கேரளாவை கண்டு மெய்மறந்து போயுள்ளார். உண்மையாகவே இது கடவுளின் தேசம் தான் என்றும், தன் விருப்பமான மாநிலம் கேரளா தான் என்றும் கூறியுள்ளார். ரஷ்ய பெண் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. நெட்டிசன்களும் இதற்கு கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவிற்கு வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் வருகை தருகிறார்கள். இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, அம்மக்கள் காட்டும் அன்பும், விருந்தோம்பல், உபசரிப்பு, இயற்கை வளங்களை கண்டு அனுபவித்து செல்கிறார்கள்.

ரஷ்யா சுற்றுலாப் பயணி
அப்படித்தான் ரஷ்யாவை சேர்ந்த பெண் அமீனா ஃபைண்ட்ஸ் என்பவர் இந்தியா முழுக்க சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட அவர், தனது விருப்பமான மாநிலம் கேரளாதான் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதும், அது வைரலாகியது. இன்ஸ்டாகிராமில் "தென் மாநிலமான கேரளா தனக்கு அமைதியாகவும், நிம்மதியாகவும் இருந்தது" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மிகவும் பிடித்தது என்றால்
அந்த பெண் தனது இன்ஸ்டாகிராமில் "இந்தியாவில் பல இடங்களுக்குப் பயணித்த பிறகு, எனது விருப்பமான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அவர், "இந்தியாவில் நான் சென்ற எல்லா இடங்களிலும் அன்பான, சுவாரஸ்யமான மக்களைச் சந்தித்தேன். பல அழகான இடங்களையும் பார்த்தேன்.
கேரளாவில் மிகவும் பிடித்தது என சொன்னால், அதன் அமைதியான உணர்வுதான். கேரளாவின் பன்முகத்தன்மை, பல்வேறு மதங்கள் அமைதியாக இணக்கமாக வாழ்வது, தூய்மையான இடங்கள் ஆகியன எனக்கு இம்மாநிலத்தின் மீதான கவனத்தை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க எந்த அளவு முயற்சிக்கின்றனர், அக்கறை கொள்கின்றனர் என்பதே இதன் உண்மையான சிறப்பம்சம்.
கடவுளின் சொந்த தேசம்
காணும் இடம் எல்லாமே சுத்தமாக காட்சியளிக்கின்றன. இயற்கையை மதித்து மக்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இதேபோன்று இங்குள்ள பன்முகத்தன்மையும் உண்மை தான். மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் கூட அமைதியாக அருகருகே உள்ளன. கல்வி மற்றும் கலாச்சாரத்துடன் மரியாதை இணையும்போது என்ன நடக்கும் என்பதற்கு சிறந்த நினைவூட்டலாக கேரளா என்னை உணர வைக்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.
"கடவுளின் சொந்த தேசம்" என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவாது 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. மேலும் இந்த வீடியோவுக்கு நூற்றுக்கணக்கானோர் கருத்து கூறி பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர் "கடவுளின் சொந்த நாட்டிற்கு வரவேற்கிறோம்! கேரளம்," என்று பதிவிட்டிருந்தார்.
கேரளா தனித்துவம் வாய்ந்தது
மற்றொரு நெட்டிசன், "கேரளாவில் இன்னும் நீங்கள் நிறைய ஆராய வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் ஒரு அற்புதம், நீங்கள் அதை ஆராய வேண்டும்," என்று கருத்து தெரிவித்தார். இன்னொருவர், "எந்த வெளிநாட்டவரும் இந்தியாவில் தங்களுக்குப் பிடித்த இடத்தைப் பற்றி விளக்கத் தொடங்கும்போது, நாங்கள் இறுதிவரை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அது கேரளா என்று எங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்னொரு நெட்டிசன் பதிவிவிடுகையில், "நதிகளிலிருந்து ஏரிகள் வரை, கடற்கரைகளிலிருந்து மலைகள் வரை, மலைவாசஸ்தலங்கள் முதல் மழைக்காடுகள் வரை எல்லாவற்றிலுமே கேரளா தனித்துவம் வாய்ந்தது தான்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications