இன்று சபரிமலை நடை திறப்பு.. ஆராட்டு விழாவுக்காக 18 நாட்கள் திறந்திருக்கும் என அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு இன்று திறக்கப்படுகிறது. தொடர்ந்து பிறகு சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் அடுத்த 18 நாட்களுக்குக் கோவில் நடை திறந்திருக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று ஐய்யப்பனை தரிசித்துத் திரும்புவார்கள். இதற்காக விரதத்தைப் பின்பற்றும் பக்தர்கள், சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்துத் திரும்புவார்கள். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

Sabarimala kerala

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு நாளை ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. முன்னதாக இன்றைய தினம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் அடுத்த 18 நாட்களுக்குக் கோவில் நடை திறந்திருக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

அதாவது இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் நிலையில், அது ஏப்ரல் 18ம் தேதி வரை திறந்தே இருக்கும். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி விஷு கனி தரிசனம் மற்றும் படி பூஜைகள் நடைபெறும் நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி இரவு ஹரிவராசனம் நடைபெறும். அதன் பிறகே நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு வைகாசி மாத பூஜைக்காக வரும் மே 14ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அப்போது மே 14ம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஆறு நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, மாசி மாத பூஜைக்காகக் கடந்த பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, பிப்ரவரி 17ம் தேதி அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+