பம்பை ஆற்றில் குறைந்த வெள்ளம்.. சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு விதித்த தடை நீக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பத்தினம்திட்டா ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.
Recommended Video
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பம்பை
இதனால் கடந்த 15-ஆம் தேதி அன்று சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி 18 ஆம் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது என கேரள அரசு முடிவு செய்தது. அது போல் தற்காலிக அவசர முன் பதிவு தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

7 இடங்கள்
கடந்த 10ஆம் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. காக்கி- அனதோடு அணைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை அணையிலிருந்து மேலும் தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்பட வாய்ப்பிருப்பதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறுகையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

உபரி நீர்
கல்கி அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை குறைந்து பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்த பின்னர் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் கனமழை காரணமாக பக்தர்கள் வருகையை ஒழுங்குப்படுத்த ஆன்லைன் பதிவு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பக்தர்கள் அதை பயன்படுத்தி வருகிறார்கள்.

தடை நீக்கம்
சபரிமலைக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதுகுறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறுகையில் பம்பையில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications