சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு இலவச காப்பீடு.. கேரள அரசு மேஜர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சத்துக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்றும், தேவஸ்தானம் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கேரள அரசு இந்த அறிவிபை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்ச்சக்கணக்கான பகதர்கள் வருகை தருவது வழக்கம். இது மட்டும் இன்றி ஒவ்வொரு மாதத்தின் தமிழ் மாதத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். சபரிமலை சீசன் காலத்தில் வரும் பக்தர்களில் சிலர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க சபரிமலையில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்களை கேரள அரசும் தேவசம்போர்டும் அமைத்துள்ளது.
இந்த நிலையில்தான் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 15 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை வரும் டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2025 ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனால், பக்தர்களின் வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின் போது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு தேவஸ்தான துறை அமைச்சர் வாசவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்டல மற்றும் மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 16 ஆம் தேதிக்கு முன்னதாக ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலையில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணை 40 லட்சம் டின் இருப்பு வைக்கப்படும். இதை முன்னிட்டு அரவணை உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு விபத்து காப்பீடு ரூ.5 லட்சம் வழங்கப்படும். மரணம் அடையும் பக்தர்களின் உடல்கள் தேவஸ்தானத்தின் சொந்த செலவில் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications