கேரள பாஜக பொதுச்செயலாளர் கைது எதிரொலி.. இன்று கேரளாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த பாஜக திட்டம்!
சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கேரளா முழுக்க பெரிய அளவில் போராட்டம் நடத்த பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கேரளா முழுக்க பெரிய அளவில் போராட்டம் நடத்த பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் கைதை தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளது.
நேற்று முதல்நாள் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது. இந்த முறை கோவில் 41 நாட்கள் திறந்து இருக்கும். இது மிக முக்கியமான பூஜையாகும்.
இதனால் இந்துத்துவா அமைப்புகள் இந்தமுறையும் பெண்களை நுழைவிற்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தியது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

உள்ளே செல்ல முயன்றார்
இந்த நிலையில் சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு பாஜகவினர் கூட்டம் கூட்டமாக நேற்று மாலை கோவிலுக்குள் வந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவிலுக்குள் செல்ல முயன்று இருக்கிறார்கள். கோவிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் கைது
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தை கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் முன்னின்று நடத்தினார். அதனால் அவரும் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு அவர் கஸ்டடியில் எடுக்கப்பட்டார்.

பெரிய போராட்டம்
இதையடுத்து கேரளாவில் மாநிலம் முழுக்க இன்று போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் கைதை தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளது. மாநிலம் முழுக்க பாஜகவினர் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது.

என்ன திட்டம்
பினராயி அரசின் செயலை கண்டித்து இன்று போராட்டம் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. கடை அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications