திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலையில் நடை சாத்தப்பட்டது... மீண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி திறப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை முடிந்ததை தொடர்ந்து கோயில் நடை இன்று சாத்தப்பட்டது.

பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sabarimala Temple laid out today after the Completion of the Pooja

கடந்த மாதம் 27-ம் தேதி மண்டல பூஜையும், கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாளிகப்புரத்தம்மன் கோவில் குருதி நிகழ்ச்சியில் பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதி கலந்து கொண்டார். ராஜகுடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனம் நடைபெறுவதால் இன்று பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17-ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

English summary
Sabarimala temple laid out today following the Makarjothi pooja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X