இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. சபரிமலையில் மெகா சாதனை! நிற்க கூட இடமில்லாமல் நெருக்கும் பக்தர்கள்!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவு சபரிமலை ஐயப்பனை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோயில் நடை திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், 26 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன்
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி கடும் விரதம் இருந்து பக்தர்கள் தொடர்ச்சியாக சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு, இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள்
ஆன்லைன் முன்பதிவு முறையின் கீழ் தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முன்பதிவு இன்றி நேரடியாக வந்த பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில் கோயில் நிர்வாகம் கடும் சவால்களை எதிர்கொண்டது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக குறைக்க உத்தரவிட்டது.
கூட்ட நெரிசல்
தற்போது தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் பெருமளவு குறைந்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, மண்டல பூஜை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு பக்தர்கள் வருகை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 16-ஆம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, மொத்தம் 26 லட்சத்து 81 ஆயிரத்து 460 பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் கூட்டம்
இந்த ஆண்டு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அழுதக்கடவு - பம்பை பாதை வழியாக 46,690 பேர் வந்துள்ள நிலையில், சத்திரம் - சன்னிதானம் வனப்பாதை வழியாக 74,473 பக்தர்கள் மலை ஏறியுள்ளனர். மேலும், பம்பை வழியாக மட்டும் 25 லட்சத்து 60 ஆயிரத்து 297 பேர் சபரிமலை சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக, டிசம்பர் 8-ஆம் தேதி மட்டும் 1 லட்சத்து 1,844 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு
வனப்பாதைகளில் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகரவிளக்கு திருவிழா நெருங்கி வரும் நிலையில், வருகிற நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications