"உயிருக்கு ஆபத்து" மஞ்சு வாரியர் புகாரின் பேரில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது
திருவனந்தபுரம்: சமூகவலைதளங்களில் தன்னை மிரட்டுவதாக மஞ்சுவாரியர் புகார் கூறிய நிலையில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வாரகாலமாக மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என்றும் அவரை 4 நாட்களாக காணவில்லை என்றும் தனது புகாருக்கு மஞ்சு வாரியரோ அவர் சம்பந்தப்பட்டவர்களோ விளக்கம் அளிக்கவில்லை என பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் மஞ்சுவாரியர் கந்து வட்டி கும்பலின் பிடியில் சிக்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் சசிதரன் தெரிவித்திருந்தார். மஞ்சு வாரியரை காணவில்லை என அவரது மேனேஜருக்கு டேக் செய்து பதிவு போட்டிருந்த போதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

மஞ்சு வாரியர் எங்கே?
மேலும் மஞ்சு வாரியர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய நான் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. காரணம் எனக்கு சட்டம் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்திருந்த சசிதரன் கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை
அதில் அவர் திருநங்கை ஷாலு மரணம் முதல் மஞ்சு வாரியர் வழக்கு வரை பல்வேறு சம்பவங்களில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியிருந்தார். மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப், விசாரணை அதிகாரிகளை தாக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக மஞ்சு வாரியர் சாட்சியம் அளித்ததால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சசிதரன் குறிப்பிட்டிருந்தார்.

தாக்கம்
சமூகவலைதலங்களில் தான் போடும் போஸ்ட்களுக்கு மஞ்சு வாரியர் எந்த ஆட்சேபமும் தெரிவிக்காததால் சந்தேகம் வலுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் மஞ்சு வாரியர், சசிதரன் மீது கொச்சியில் உள்ள எலாம்கரா காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார்.

இயக்குநர் கைது
அதில் சமூகவலைதளங்களில் எனது பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையிலும் என்னை மிரட்டும் வகையிலும் பதிவுகளை சசிதரன் போடுகிறார் என மஞ்சு வாரியர் தனது புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வைத்து சசிதரனை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீகுமாரால் எனது உயிருக்கு ஆபத்து என மஞ்சு வாரியர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications